ராஜமவுலியை தொடர்ந்து சஞ்சய் லீலா பன்சாலி… ஆதிக்கம் செலுத்தும் ஆலியா பட்!

மும்பை: பாலிவுட் நடிகை ஆலியா பட், தொடர்ந்து பிரம்மாண்ட படங்களில் நடித்து வருகிறார்.

பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ' ஆர்.ஆர்.ஆர்' படத்தில் நாயகியாக நடித்து வரும் ஆலியா பட் அந்த படத்தை தொடர்ந்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் கங்குபாய் காத்தியாவதி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Alia Bhatt roped into Sanjay Leela Bhansalis Gangubai Kathiawadi film

பாலிவுட்டின் இளவரசியாக வலம் வரும் ஆலியா பட், தொடர்ந்து பாலிவுட்டின் பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா என இருவரும் ஹாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் நிலையில், ஆலியா பட், பாலிவுட்டை தனது கைவசப்படுத்தியுள்ளார்.

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் 250 கோடி மதிப்பில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஆலியா பாட் நடித்து வருகிறார்.

பத்மாவத் எனும் பிரம்மாண்ட படத்தை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலியின் புதிய படம் மாஃபியா ராணியான கங்குபாய் காத்தியாவதியை மையமாக அவரது பெயரிலே எடுக்கப்பட உள்ளது. இந்த படத்தில் கங்குபாயாக ஆலியா நடிக்கவுள்ளார்.

சமீபத்தில், 2020ம் ஆண்டிற்கான ஆஸ்கர் ரேஸில் இந்தியா சார்பாக ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் வெளியான 'கல்லி பாய்' பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழ் உள்பட இந்திய மொழியில் வெளியான 20 படங்களுடன் போட்டியிட்டு 'கல்லி பாய்' ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில், தமிழில் வெளிவந்த வடசென்னை, சூப்பர் டீலக்ஸ் மற்றும் ஒத்த செருப்பு உள்ளிட்ட படங்களின் பெயர்களும் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகவுள்ள 'கங்குபாய் காத்தியாவதி' படம் அடுத்த ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் ஹுசைன் சைதியால்த் எழுதிய மாஃபியா குயின்ஸ் ஆஃப் மும்பை நாவலை தழுவி படமாக்கப்பட உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X