டிரைவர், உதவியாளருக்கு வீடு வாங்க ரூ. 50 லட்சம் கொடுத்த வாரிசு நடிகை

By Siva

மும்பை: பாலிவுட் நடிகை ஆலியா பட் தனது டிரைவர் மற்றும் உதவியாளருக்கு செய்த உதவியை பார்த்து பாராட்டாதவர்களே இல்லை.

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளவர் ஆலியா பட். அண்மையில் அவர் தனது 26வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாள் பார்ட்டியில் காதலரும், நடிகருமான ரன்பிர் கபூர், தந்தை மகேஷ் பட், அக்கா பூஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ஆலியா தனது பிறந்தநாளுக்கு முன்பு செய்த காரியம் குறித்து தெரிய வந்துள்ளது.

ஆலியா

ஆலியா

ஆலியா நடிக்க வந்ததில் இருந்து அவரின் கார் டிரைவராக உள்ளவர் சுனில். அதே போன்று ஆலியாவின் உதவியாளராக இருப்பவர் அன்மோல். அவர்கள் இருவருக்கும் மும்பையில் சொந்த வீடு வாங்க பணம் கொடுத்துள்ளார் ஆலியா.

ரூ. 50 லட்சம்

ரூ. 50 லட்சம்

ஆலியா பட் தனது பிறந்தநாளுக்கு முன்பு டிரைவர் மற்றும் உதவியாளருக்கு ரூ. 50 லட்சம் மதிப்புள்ள இரண்டு காசோலைகளை அளித்துள்ளார். அதை வைத்து அவர்கள் மும்பையில் வீடு வாங்கியுள்ளனர்.

பாராட்டு

பாராட்டு

தான் நடிக்க வந்ததில் இருந்து தனக்கு விஸ்வாசமாக இருப்பதால் சுனில் மற்றும் அன்மோலுக்கு வீடு வாங்க பணம் கொடுத்துள்ள ஆலியாவை பலரும் பாராட்டுகிறார்கள். ஆலியா தனக்கு என்று மும்பையில் இரண்டு வீடுகள் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலன்க்

கலன்க்

அபிஷேக் வர்மன் இயக்கத்தில் தான் நடித்த கலன்க் பட விளம்பர நிகழ்ச்சிகளில் ஆலியா பிசியாக உள்ளார். அந்த படத்தில் வருண் தவான், மாதுரி தீக்ஷித், சஞ்சய் தத், சோனாக்ஷி சின்ஹா, ஆதித்யா ராய் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X