Ram Temple: அடடா!. ஒட்டுமொத்த ராமாயணமும் ஆலியா பட் சேலையில் இருக்கா?.. அயோத்தியே அசந்துடுச்சே!
அயோத்தி: உத்தர பிரதேசம், அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயில் நேற்று துவக்க விழா நிகழ்ச்சியுடன் திறக்கப்பட்டது. நாடு முழுவதும் சுமார் 8000 பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. ரஜினிகாந்த், சச்சின், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் முன் வரிசையில் அமர்ந்திருக்க ஆலியா பட், ரன்பீர் கபூர் எல்லாம் அடுத்தடுத்த வரிசையில் அமர்ந்து ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
ஆலியா பட்டின் சேலை தான் அனைவரது பார்வையையும் அதிரடியாக கவர்ந்துள்ளது. அதற்கு காரணம் ராமாயண தீமில் அவர் அணிந்து வந்த சேலை தான் காரணம் என்கின்றனர்.

அயோத்தி கோயிலுக்கு வந்த ஆலியா பட்: தனது கணவர் ரன்பீர் கபூருடன் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு நடிகை ஆலியா பட் வந்திருந்தார். ரன்பீர் கபூர் வெள்ளை நிற ஆடையை அணிந்திருந்த நிலையில், ராமருக்கே உகந்த நீல நிறத்திலான சேலையை அணிந்து கொண்டு ஆலியா பட் அந்த சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டது அனைத்து ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
அனிமல் வெற்றி: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான அனிமல் திரைப்படத்தில் அலியாபட்டின் கணவரும் பாலிவுட் நடிகருமான ரன்வீர் கபூர் நடித்திருந்தார். ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அடுத்ததாக ரன்பீர் கபூர் ராமாயணம் படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராமாயணம் படத்தில் ஆலியா பட் இல்லை: கடந்தாண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதி புருஷ் திரைப்படம் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த படத்திற்கு பாலிவுட்டில் கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், ரன்பீர் கபூர் நடிப்பில் புதிய ராமாயணம் படம் ஒன்று சம்பந்தமாக பாலிவுட்டில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாக உள்ள அந்த படத்தில் ஆலியா பட் நடிக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக சீதையாக சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சேலையில் ராமாயணம்: கம்பராமாயணம் கேள்விப்பட்டிருப்போம் அது என்னடா கட்டுற புடவையில ராமாயணம் என அயோத்தியில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் ஆலியா பட். அவர் அன்பு வந்த நீல நிற சேலையில் முழுவதும் ராமாயணத்தில் இடம்பெறும் காட்சிகள் பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்டிருந்தது ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த நிலையில் சமூக வலைத்தளங்கள் முழுவதும் ஆலியா பட்டின் புதிய ராமாயண சேலை ட்ரெண்டாகி வருகிறது.

ராஜமௌலி படத்தில் சீதையாக: ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடித்து வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் சீதா எனும் கதாபாத்திரத்தில் ஆலியா பட் நடித்திருந்தார். ராமராக ராம் சரணும் ஹனுமனாக ஜுனியர் என்டிஆர், அயோத்தியில் இருந்து சீதையை காப்பாற்றுவது போல சின்ன பொண்ணை காப்பாற்றும் கதையை ஆங்கிலேயர்கள் கால கொடுமை என்கிற பெயரில் படமாக எடுத்திருந்தார் ராஜமெளலி என்கிற விமர்சனங்களும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











