ரூ. 100 கோடி வசூலை எட்டிய கங்குபாய் கத்தியாவாடி... ஆலியா செஞ்ச வேலைய பாருங்க!
மும்பை : நடிகை ஆலியா பட் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ள நிலையில் கடந்த மாதத்தில் இவரது நடிப்பில் கங்குபாய் கத்தியாவாடி படம் ரிலீசானது. உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.

நடிகை ஆலியா பட்
நடிகை ஆலியா பட் பாலிவுட்டின் மிகவும் சிறப்பான நடிகையாக மாறியுள்ளார். ஆரம்பத்தில் இவரது நடிப்பு விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், அதை சேலஞ்சாக கொண்டு தனது நடிப்பை மெருகேற்றிக் கொண்டுள்ளார். தற்போது பாலிவுட்டில் மட்டுமில்லீங்க தென்னிந்திய மொழிகளிலும் மோஸ்ட் வான்டட் ஹீரோயினாக மாறியிருக்காங்க.

ஆலியா நடிப்பில் ஆர்ஆர்ஆர்
இவரது நடிப்பில் வரும் 25ம் தேதி ஆர்ஆர்ஆர் படம் வெளியாக இருக்கு. இந்தப் படத்துல இவங்கதான் ஹீரோயின். படத்தின் டீசர், ட்ரெயிலரில் அழகான ஆலியாவை பார்க்க முடியுது. இவங்க ஏற்கனவே அழகுதான் என்றாலும் இவரது லுக் படத்தில் மிகவும் பேசப்பட்டு வருகிறது. ரசிகர்கள் படத்தை மிகவும் எதிர்பார்த்துள்ளனர்.

அர்ஜுன் கபூருடன் காதல்
தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் ஆலியா, பாலிவுட்டில் அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார். சில ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வரும் நிலையில், இவர்களது திருமணமே தற்போது டாக் ஆப் தி டவுனாக உள்ளது. விரைவில் இவர்கள் தங்களது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கங்குபாய் கத்தியாவாடி படம்
கடந்த மாதத்தில் ஆலியா நடிப்பில் பாலிவுட்டில் வெளியான கங்குபாய் கத்தியாவாடி படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருந்தார். உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு படம் வெளியான நிலையில், ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

ரூ 100 கோடி கிளப்
மாஃபியா குயின்ஸ் ஆப் மும்பை என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஆலியா, தனது டயட் உள்ளிட்ட எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் பர்கரை ஒரு வெட்டு வெட்டுகிறார்.

பர்கரை ஒரு வெட்டு வெட்டிய ஆலியா
ஆனால் வேகன் பர்கர் என்று அவர் பதிவிட்டுள்ளார். 100 கோடி ரூபாய் வசூல்மழையை கங்குபாய் கத்தியாவாடி படம் எட்டியதையடுத்து தான் அதை கொண்டாடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது 22 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கமெண்ட்டுகளையும் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











