ஆர்யாவை எல்லா பெண்களுக்குமே பிடிக்கும், அவர் குணம் அப்படி: அனுஷ்கா
சென்னை: நடிகர் ஆர்யாவை அனைத்து பெண்களுக்கும் பிடிக்கும் என்று நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார்.
அனுஷ்கா, ஆர்யா நடித்த இரண்டாம் உலகம் படம் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. படக்குழுவினர் கஷ்டப்பட்டு உழைத்த போதிலும் படம் ஓடவில்லை.
இந்நிலையில் இந்த படத்தில் தன்னுடன் பணியாற்றிய ஆர்யா குறித்து அனுஷ்கா புகழ்ந்து பேசியுள்ளார்.

ஆர்யா
ஆர்யாவுக்கு நான் யோகா சொல்லிக் கொடுத்ததாக வரும் தகவல்களில் உண்மை இல்லை. அவர் உடற்பயிற்சி செய்து உடம்பை என்னைவிட ஃபிட்டாக வைத்துள்ளார். அப்படி இருக்கையில் நான் எதற்காக அவருக்கு யோகா சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றார் அனுஷ்கா.

நல்ல நண்பர்
ஆர்யாவை பற்றி பலர் ஏதேதோ சொல்கிறார்கள். ஆனால் அவர் நல்ல நண்பர். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். அவரின் கடுமையான உழைப்பை பார்த்து ஆச்சரியப்பட்டவள் நான் என்று அனுஷ்கா தெரிவித்தார்.

எல்லா பெண்களுக்கும்
ஆர்யாவுக்கு ரொம்ப நல்ல குணம் உள்ளது. அதனால் அவரை அனைத்து பெண்களுக்குமே பிடிக்கும். தன்னுடன் நடிக்கும் நடிகைகளுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுப்பார் என்று அனுஷ்கா புகழ்ந்தார்.

சகுனியில்
சகுனி படத்தில் அனுஷ்கா கார்த்தியை பார்த்து உங்களை எல்லாப் பெண்களுக்குமே பிடிக்கும் என்று கூறியிருப்பார். தற்போது நிஜத்தில் ஆர்யாவை அனைத்து பெண்களுக்கும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











