எல்லா ஹீரோயின்களுக்கும் விஜய், அஜீத் கூட நடிக்க ஆசை: ரம்யா நம்பீசன்
சென்னை: மாஸ் ஹீரோக்களான விஜய் மற்றும் அஜீத்துடன் நடிக்க அனைத்து நடிகைகளும் விரும்புவார்கள் என்று ரம்யா நம்பீசன் தெரிவித்துள்ளார்.
ரம்யா நம்பீசனை நடித்த பீட்சா படம் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. அதன் பிறகு அவர் சி.எஸ். அமுதனின் இயக்கத்தில் ரெண்டாவது படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆனது.
இந்நிலையில் ரம்யாவிடம் மாஸ் ஹீரோக்களான விஜய், அஜீத்துடன் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு அவர் அனைத்து ஹீரோயின்களுமே அவர்களுடன் நடிக்க ஆசைப்படுவார்கள் என்றார்.

விஜய், அஜீத்துடன் நடிக்க ஆசை
அனைத்து ஹீரோயின்களைப் போன்று தனக்கும் விஜய், அஜீத்துடன் நடிக்க ஆசையாக உள்ளது என்று ரம்யா தெரிவித்துள்ளார்.

ஹீரோ முக்கியமில்ல
ரம்யாவுக்கு கதை தான் முக்கியமாம், ஹீரோ முக்கயமில்லையாம். அதனால் நல்ல கதையாக இருந்தால் ஹீரோவைப் பற்றி கவலைப்படாமல் அவர் நடிக்க ஒப்புக் கொள்வாராம்.

கை நிறைய படங்கள்
தற்போது ரம்யா கையில் 2 தமிழ் படங்கள் மற்றும் அரை டஜன் மலையாளப் படங்கள் உள்ளன.


Click it and Unblock the Notifications











