அட்வான்ஸை திருப்பிக் கொடுக்க மறுத்த நடிகை: கோபத்தில் தயாரிப்பாளர்

By Siva

ஹைதராபாத்: பண விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளருக்கும், நடிகை மெஹ்ரீனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

குஷி தயாரிப்பில் சுதீர் பாபு ஜோடியாக நடிக்க தெலுங்கு படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆனார் மெஹ்ரீன் பிர்சாதா. ஒப்பந்தம் ஆன கையோடு அவருக்கு முன்பணம் கொடுக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் பூஜையும் போடப்பட்டது.

இந்நிலையில் திடீர் என்று சுதீர் பாபு படத்தில் இருந்து விலகினார்.

சிரஞ்சீவி மருமகன்

சிரஞ்சீவி மருமகன்

சுதீர் பாபு விலகியதை அடுத்து சிரஞ்சீவியின் மருமகன் கல்யாண் தேவை ஹீரோவாக நடிக்க வைக்க முடிவு செய்தார் தயாரிப்பாளர் குஷி. கல்யாண் தேவுக்கு ஜோடியாக மெஹ்ரீன் இல்லாமல் வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்க தீர்மானித்தார் குஷி. இதையடுத்து தனது முடிவை மெஹ்ரீனிடம் அவர் தெரிவித்தார்.

ஹீரோயின்

ஹீரோயின்

படத்தின் ஹீரோ மாறிவிட்டார். அதனால் ஹீரோயினையும் மாற்ற நினைக்கிறோம். நான் கொடுத்த முன்பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்று குஷி மெஹ்ரீனிடம் கேட்டுள்ளார். மெஹ்ரீனோ முழு பணத்தையும் திருப்பிக் கொடுக்க மறுத்துவிட்டார். இதையடுத்து குஷி மெஹ்ரீன் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

மெஹ்ரீன்

மெஹ்ரீன்

நான் குஷியின் படத்திற்காக டேட்ஸ் கொடுத்தேன். அந்த டேட்ஸை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அந்த படத்திற்கு டேட்ஸ் கொடுத்ததால் இரண்டு பட வாய்ப்புகளை இழந்துவிட்டேன். அந்த படத்தின் வேலையும் துவங்கவில்லை. இதனால் எனக்கு தான் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது என்று மெஹ்ரீன் விளக்கம் அளித்துள்ளார்.

பணம்

பணம்

இந்த விஷயத்தால் மெஹ்ரீன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். அவர் மா அமைப்பில் உறுப்பினராக இருப்பதால் அவர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதற்கு கட்டுப்பட்டு பணத்தை திருப்பிக் கொடுக்க மெஹ்ரீன் தயாராக உள்ளார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X