சகலகலா வள்ளி ஆல்ரவுண்டர் அழகி யாரு ? நம்ம ப்ரியா ஆனந்த்து !!!

Recommended Video

நானும் அஜித் சாரும் ஒரேமாதிரி | ACTRESS PRIYA ANAND | V-CONNECT | FILMIBEAT TAMIL

சென்னை : நடிகை ப்ரியா ஆனந்த் தமிழில் ஜெய்யுடன் வாமனன் படத்தில் அறிமுகமானவர் . அதற்கு பிறகு தமிழ், தெலுங்கு , கன்னடம் , மலையாளம் என தென்னிந்திய சினிமாவை ஒரு சுற்று சுற்றி வந்தார் ப்ரியா ஆனந்த். மேலும் ப்ரியா ஆனந்த் ஹிந்தியில் இங்கிலீஸ் விங்கலீஸ் , ரங்கரீஸ், ஃவுக்ரே,ஃவுக்ரே ரிட்டன்ஸ் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மற்ற மொழிகளை விட தமிழில் அதிக படங்களில் நடித்திருக்கிறார் ப்ரியா ஆனந்த் .

ப்ரியா ஆனந்த 2011 'சேவ் தி சில்ரன்' எனும் அமைப்பின் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியின் தூதராக இணைந்து தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் விழிப்புணர்வு ஏற்படுத்த உதவினார் . 'சேவ் தி சில்ரன்' அமைப்பு கடந்த 100வருடங்களுக்கு மேல் குழந்தை தொழிலாளர்கள் அடிமைகளாக சிக்கி தவிக்கும் குழந்தைகள் என பல குழந்தைகளை மீட்டு வருகிறது. ப்ரியா ஆனந்த அந்த குழுவுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது எனக்கான கடமை என்று கூறியிருந்தார் .

All rounder Priya Anand

ப்ரியா ஆனந்தின் அப்பா தெலுங்கு பேசுபவர். அம்மா மராட்டி பேசுபவர். சிறு வயதில் இருந்தே பல மொழிகளை கற்று சென்னையில் வளரந்தவர் ப்ரியா .இவருக்கு சரளமாக தமிழ், தெலுங்கு ,ஹிந்தி ,மராட்டி,பெங்காளி மற்றும் ஸ்பேனிஷ் வரை தெரியும் . இந்த காலகட்டத்தில் பல மொழிகளில் பேசும் நடிகையை காண்பது மிகவும் சிரமமான விஷயம் .

All rounder Priya Anand

சிறுவயதில் இருந்தே ப்ரியா ஆனந்த் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதையே கணவாய் கொண்டு வாழ்ந்து வந்தார் .அமேரிக்காவின் சன்னி அல்பனி பல்கலைக்கழகத்தில் பட்டம் முடித்து இந்தியா திரும்பிய ப்ரியா தனது கனவுப்படி சினிமாவில் நுழைய மாடலிங் , விளம்பரங்களில் நடிப்பது என தனது வேலைகளை செய்யும் போது தான் அவருக்கு வாமனன் படம் மூலம் அறிமுகமானார்.

All rounder Priya Anand

ப்ரியா ஆனந்த தற்போது துரூவ் விக்ரம் அறிமுகமாகும் ஆதித்யா வர்மா படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் கதாநாயகி பனித்தா சந்துவுடன் நட்பாகி உள்ள ப்ரியா அவருடன் தான் பட புரோமஷன்களில் கலந்து கொள்கிறார் . அவருக்கு இந்த படம் நிச்சயம் பாராட்டுகளை அள்ளித்தரும்.

All rounder Priya Anand

அதனை தொடர்ந்து ப்ரியா ஆனந்த் தமிழில் சுமோ படத்தில் நடித்து வருகிறார். ஐசரி.கே.கணேஷ் தயரிப்பில் விடிவி கணேஷ், யோகி பாபு மற்றும் ப்ரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படம் ஒரு பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

இப்படி சரியான இடைவெளி விட்டு நடித்தாலும் ப்ரியா ஆனந்த் தனக்கு பொருத்தமான கதாபாத்திரங்களாகவே தேர்ந்தேடுக்கிறார். ஆல் தி பெஸ்ட் ப்ரியா !!!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X