பூஜா ஹெக்டேவை திடீரென போட்டு பொளக்கும் அல்லு அர்ஜுன் ரசிகர்கள்.. பாவம் அவரே கன்ஃப்யூஸ் ஆகிட்டாரு!
சென்னை: தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. இந்த ஆண்டு அவருக்கு தமிழில் சூர்யாவின் ரெட்ரோ மற்றும் தளபதி விஜய்யின் ஜன நாயகன் என 2 படங்கள் ரிலீஸாக காத்திருக்கின்றன. ஜனவரி 31ம் தேதி பாலிவுட்டில் அவர் நடித்து வெளியான தேவா திரைப்படம் தொடர்பாக அளித்த பேட்டியின் போது அல்லு அர்ஜுன் படம் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.
50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பாலிவுட் படமான தேவா திரைப்படம் இதுவரை 22 கோடி ரூபாய் தான் வசூல் செய்திருப்பதாக கூறுகின்றனர். ஷாகித் கபூர், பூஜா ஹெக்டே நடித்த இந்த படமும் பாலிவுட்டுக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை என்கின்றனர்.

தொடர்ந்து பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான 5வது படமும் தோல்வி முகத்தை தழுவி வரும் நிலையில், அடுத்து வெளியாக காத்திருக்கும் 2 பெரிய தமிழ் படங்களின் நிலை என்னவாகும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
அல்லு அர்ஜுன் படம் தமிழ் படமா?: மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளியான முகமூடி படம் மூலம் சினிமாவில் ஹீரோயினாக 2012ம் ஆண்டு அறிமுகமானவர் தான் பூஜா ஹெக்டே. துல்கர் சல்மான் போல இவரும் சினிமாவுக்கு வந்து 13 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் இளம் நடிகையாகவே வலம் வருகிறார். தமிழை விட தெலுங்கில் தான் இவர் அதிக படங்களில் நடித்துள்ளார். ஆனால், அல்லு அர்ஜுன் உடன் இணைந்து இவர் நடித்து மிகப்பெரிய வெற்றிப் பெற்ற அலா வைகுந்தபுரமுலோ திரைப்படம் தமிழ்ப்படம் என சமீபத்தில் அளித்த பேட்டியில் பூஜா ஹெக்டே பேசியதை கேட்ட அல்லு அர்ஜுன் ஆர்மி அவரை சோஷியல் மீடியாவில் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

2 படங்கள்: அல்லு அர்ஜுன் உடன் டிஜே துவடு ஜகநாதம் மற்றும் அலா வைகுந்தபுரமுலோ என 2 படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ள பூஜா ஹெக்டேவுக்கு அவர் நடித்த பல படங்களிலேயே வெற்றிப் படங்களாக மாறியதே அந்த படங்கள் தான் என்றும் அந்த படங்களையே அவர் மறந்துவிட்டு அல்லு அர்ஜுன் நடித்த படத்தை தமிழ் படம் என எப்படி சொல்வார் செம போதையில் பேட்டிக் கொடுத்தாரா என தெலுங்கு ரசிகர்கள் கண்டபடி திட்டி வருகின்றனர்.

ரெட்ரோ படம் சான்ஸ் எப்படி கிடைத்தது?: பிரபாஸ் உடன் இணைந்து பூஜா ஹெக்டே நடித்த ராதே ஷ்யாம் திரைப்படம் படுதோல்வியடைந்த நிலையில், அந்த படத்தில் பூஜா ஹெக்டேவின் எமோஷனலான காட்சிகளை பார்த்து கார்த்திக் சுப்புராஜ் தன்னை ரெட்ரோ படத்தில் புக் செய்துள்ளதாகவும் பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.

ஜனநாயகன் ஜாக்பாட்: பீஸ்ட் படத்தில் நடித்ததில் இருந்தே மீண்டும் அரபிக் குத்து ஜோடி எப்போ இணையும் என ரசிகர்கள் கேட்டு வந்தனர். அதுவும் தளபதி விஜய்யின் கடைசி படத்தில் எனக்கு அவருடன் மீண்டும் இணைந்து நடிக்க சான்ஸ் கிடைத்தது மிகப்பெரிய ஜாக்பாட் என்றே கருதுகிறேன் எனக் கூறியுள்ளார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருவதால் பாவம் அவரே கன்ஃப்யூஸ் ஆகி அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுரமுலோ படத்தை தமிழ்ப்படம் எனக் கூறியிருப்பார் என தளபதி ரசிகர்கள் முட்டுக் கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











