கைது இல்லை - ஜாமீன் மனுவை வாபஸ் வாங்கினார் அல்போன்சா!

By Shankar

Alphonsa
சென்னை: காதலன் மர்ம சாவு தொடர்பான வழக்கில் கைது நடவடிக்கை இல்லை என தெரிந்ததால் நடிகை அல்போன்சா தனது முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார்.

நடிகை அல்போன்சாவுடன் வசித்து வந்த அவரது காதலர் வினோத்குமார் சமீபத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக அல்போன்சா தரப்பில் கூறி வந்தனர். ஆனால் வினோத்குமார் குடும்பத்தினர் இதை திட்டமிட்ட கொலை என்றனர்.

வினோத்குமாரை அல்போன்சாவும், அவரது தம்பி ராபர்ட்டும் அடித்து கொலை செய்து பிணத்தை தூக்கில் தொங்க விட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் அல்போன்சா மனு தாக்கல் செய்தார். நீதிபதி எம்.எஸ்.சுந்தரேஸ்முன்னிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் வாதாடும்போது வினோத்குமார் மரணத்தை சந்தேக மரணமாக போலீசார் பதிவு செய்துள்ளனர்.

குற்றப் பத்திரிகையில் அல்போன்சா, ராபர்ட் பெயர்கள் சேர்க்கப்படவில்லை என்றார். உடனே நீதிபதி அப்படியென்றால் முன்ஜாமீன் அவசியம் இல்லை என்று கூறினார்.

இதையடுத்து கைது நடவடிக்கை இருக்காது என கருதி முன்ஜாமீன் மனுவை அல்போன்சா வாபஸ் பெற்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X