»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோலிவுட்டில் (அதாங்க நம்ம தமிழ்த் திரையுலகம்) இன்னொரு தற்கொலை முயற்சி.

தற்கொலைக்கு முயன்றது மாம்பழத்தின் பெயரில் வந்து, ரசிகர்கள் மனதைக் கொக்கி போட்டுக் கொள்ளையடித்த அல்போன்சா.

சென்னையில் தற்கொலை செய்ய முயன்று, விஜி வழியில் விதியை முடித்துக் கொள்ள இருந்த அல்போன்சாவை டாக்டர்கள் காப்பாற்றியுள்ளனர்.

ரஜினிகாந்தின் பாட்ஷா படத்தில் "ரா ரா ராமய்யா எ ன்ற பாட்டுக்கு துள்ளாட்டம் போட்டு, தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் அல்போன்சா.பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மலையாளப் படவுலகில் நுழைந்து ரசிகர்களை மயக்கியவர்.

மலையாளத்தில் மோகன்லாலுடன் நரசிம்மம் என்ற படத்தில் நடித்த பின்னர் மலையாளப் படவுலகின் கனவுக் கன்னி ஆனார். அதற்குப் பின் பருவ மழைஎன்ற மலையாளப் படத்தில் நடித்தார்.

அல்போன்சாவின் ஆல்கஹால் கண்களால் போதையேறிய மலையாள ரசிகர்கள் அமோக ஆதரவு அளித்தனர்.

இந்த நிலையில்தான் எல்லோரையும் போல அல்போன்சாவும் காதலில் சிக்கினார். சாகர் என்ற சக நடிகரை துரத்தித் துரத்திக் காதலித்தார். ஆனால்அவர் திருமணமானவர். (என்னவோப்பா, நம்ம நடிகைகளுக்கு திருமணமானவர்கள் மீது அப்படி என்னதான் மோகமோ?). சாகரும் அல்போன்சாவைக்காதலித்தார்.

முஸ்லீம் என்ற போதிலும் அல்போன்சாவைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்தார். இடையில் என்ன நடந்ததோ?. சமீபத்தில் அல்போன்சாஅளவுக்கதிகமான தூக்க மாத்திரைகளை விழுங்கினார். மயங்கிய நிலையில் அவரை சென்னை சூர்யா மருத்துவமனையில் சேர்த்தனர். சரியான நேரத்தில்டாக்டர்கள் கொடுத்த சிகிச்சையால் உயிர்பிழைத்தார்.

போலீசுக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்படவில்லை. சமீபத்தில்தான் அல்போன்சா சென்னை சாலிக்கிராமத்தில்புதிய வீடு கட்டி பால் காய்ச்சினார். ரஜினிகாந்தின் பரிவு இவருக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரதுபரிந்துரையால் பல படங்களில் டான்ஸ் ஆடும் வாய்ப்பு கிடைத்தது.

அல்போன்சாவின் தம்பியும் ஒரு டான்சரே.

Read more about: alphonsa attraction dancer film

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil