அங்கிள், உங்க பையனை எனக்கு ரொம்பப் பிடிக்கும்... ரிஷி கபூரிடம் வழிந்த டாப்ஸி
ரன்பீர் கபூரை எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று அவரது அப்பாவான நடிகர் ரிஷி கபூரிடமே பூரிப்புடன் சொல்லி ரிஷியை நெளியவைத்து விட்டார் நடிகை டாப்ஸி.
டாப்ஸிக்காக சென்னையில் இரண்டு நடிகர்கள் அடித்துக் கொண்டார்கள் என்பது பழைய செய்தி. இப்போது டாப்ஸி ஒருவரைப் பார்த்து வழிந்தார் என்பதுதான் புதுச் செய்தி.
தமிழ், தெலுங்கில் நடித்து வரும் டாப்ஸி, தற்போது சேஸ்மே பத்தூர் என்ற இந்திப் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் முன்னாள் ஹீரோ ரிஷி கபூரும் நடிக்கிறார்.

மகன் குறித்து அப்பாவிடம் ஜொள்ளு...
ரிஷி கபூரின் மகன்தான் ரன்பீர் கபூர். படப்பிடிப்பின்போது ரன்பீர் கபூர் குறித்த ரிஷியுடன் அதிகம் பேசுகிறாராம் டாப்ஸி. இதைக் கேட்டு நெளியும் நிலைக்குப் போய் விட்டாராம் ரிஷி.

காதல் கூட வந்ததே
இதுகுறித்து சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், எனக்கு உங்கள் மகன் என்றால் ரொம்பப் பிடிக்கும். அவர் மீது எனக்கு காதல் கூட வந்தது. ரன்பீரின் மிகப் பெரிய ரசிகை நான். எனக்குப் பிடித்த படம் ராக்ஸ்டார்தான் என்று ரிஷியிடம் விழுந்து விழுந்து வழிந்தாராம் டாப்ஸி.

நெருங்கிய தோஸ்த்
படப்பிடிப்பின்போது ரிஷி கபூருடன் நல்ல நட்பு பிடித்து விட்டாராம் டாப்ஸி. காரணம், தன்னைப் போலவே ரிஷி கபூரும் சாப்பாட்டுப் பிரியர் என்பதால் ஈஸியாக தோஸ்த் ஆகி விட்டார்களாம் இருவரும்.

ரீமேக் படம்
சாஸ்மே பத்தூர்தான் டாப்ஸிக்கு இந்தியில் முதல் படம். இது ஒரு ரீமேக் படமாகும். 1981ம் ஆண்டு இதே பெயரில் தீப்தி நவல் நடிப்பில் வெளியான படம் இது. இப்போது ரீமேக் செய்கிறார்கள்.
சரி, டாப்ஸி புகழ்ந்து பேசியதை ரன்பீரிடம் சொல்லியிருப்பாரா 'டாடி' கபூர்...??


Click it and Unblock the Notifications











