மொட்டை தலை.. உருக்குலைந்து போன உடல்.. அமைதிப்படை நடிகையின் கண்ணீர் கதை

சென்னை: தமிழ் சினிமாவில் அரசியல் நையாண்டியை மிகத் துணிச்சலாக பேசிய திரைப்படம் தான் அமைதிப்படை. அந்த படத்தை பற்றி பேசியதுமே அனைவரின் நினைவிற்கு வரும் காட்சி சத்யராஜ் கஸ்தூரிக்கு அல்வா கொடுப்பது தான். தற்போது வரை அந்த சீன் பேசப்பட்டு வருகிறது. அதே போல அரசியல் உண்மையை நெருக்கமாக காட்டிய காட்சி என்றால் அது வாக்கு எண்ணிக்கையின் போது மணிவண்ணன் ஆள் மீது சத்யராஜ் கைபோடும் சீன் தான். அந்த காட்சியை தற்போது வரை அரசியல் சூழ்நிலையோடு ஒப்பிட்டு பேசி வருகின்றனர். இந்த காட்சியில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஜெய வாகினி. ஒரே ஒரு சீன் வந்தாலும் இன்றும் பேசப்படும் நடிகையாக இருக்கும் வாகினியின் கண்ணீர் கதையை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நடிகை ஜெய வாகினி: 1972ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் பிறந்தவர் தான் நடிகை ஜெய வாகினி. இவரின் இயற்பெயர் பத்மா விஸ்வரி. சினிமாவிற்காகவே தன்னுடைய பெயரை ஜெய வாகினி என மாற்றிக் கொண்டார். சின்னத்திரை மூலம் தனது கலைப்பயணத்தை தொடங்கி இவர், ஆரம்பத்தில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்தார். பின் தெலுங்கு தொடர்களில் வலுவான வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துப் பாராட்டைப் பெற்றார். குறிப்பாக இவர் நடித்த 'வாசவி', 'பத்மா' போன்ற கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனி அடையாளம் பெற்றார்.

Amaidhipadai Actress Jaya Vagini

கவனம் ஈர்த்த நடிகை: சின்னத்திரையில் கிடைத்த வரவேற்பின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படித்தான் மணிவண்ணன் இயக்கிய அமைதிப்படை படத்தில் மணிவண்ணனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். சத்யராஜ், கஸ்தூரி, ரஞ்சிதா போன்றவர்களுக்கு கிடைத்த புகழைப்போல ஒரு சீனில் நடித்து இருந்தாலும் ஜெய வாகினிக்கும் பெயர் கிடைத்தது. ஆனால், தமிழில் படவாய்ப்புகள் வரவில்லை.

மார்பக புற்றுநோய்: இதனால், தெலுங்கு பக்கம் வந்த இவர் சீரியல் சினிமா என தொடர்ந்து நடித்து வந்தார். கடைசியாக இவர் 2019ஆம் ஆண்டு வெளியான 'ரகுபதி வெங்கையா நாயுடு' வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் வி.கே. நரேஷுடன் இணைந்து நடித்தார். அதன் பின் 'பஹிர்பூமி' படத்தில் நடித்தார். இது தான் ஜெய வாகினி நடித்த கடைசி படங்கள். அதன் பின் அவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சைக்கு வருமானமும் இல்லை, கவனித்துக்கொள்ள யாரும் இல்லாமல் கடைசி காலத்தில் மிகவும் வேதனைகளை அனுபவித்து வந்த ஜெய வாகினியின் நிலைமை குறித்து அவரது தோழி ஒருவர் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

Amaidhipadai Actress Jaya Vagini

அந்த போட்டோவில் ஜெய வாகினி மொட்டை தலையுடன், உடல் மெலிந்து காணப்பட்டார். அந்த தகவல் இணையத்தில் பரவி பலரும் உதவிக்கரம் நீட்டுவதற்குள் ஜெய வாகினி இந்த ஆண்டு பிப்ரவரி 4ந் தேதி (4.2.2026) ஆண்டு உயிரிழந்தார். சினிமாவின் மூலம் நம்மை மகிழ்வித்த ஜெய வாகினியின் மறைவு பலரை கலங்கவைத்தது. ஜெய வாகினியின் தோழி இவரின் போட்டோவை பகிராமல் இருந்து இருந்தால் இவரின் மரணம் கூட வெளியில் தெரிந்து இருக்காது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X