நடிகை அமலா சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் கணம்...டீசர் அப்டேட் வெளியானது.!
சென்னை: தமிழ் இயக்குனர் எம் சரவணன் இயக்கத்தில் வெளியான எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றவர் பிரபல தெலுங்கு நடிகர் சர்வானந்த்
தமிழில் ஒரு சில படங்களில் நடித்து இங்கும் பிரபலமாக உள்ள இவர் தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார்.
இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் கணம் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வர நடிகை அமலா இதில் முக்கிய வேடத்தில் நடித்து ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டீசர் குறித்த முக்கிய அப்டேட் தற்பொழுது வெளியாகி உள்ளது.

எங்கேயும் எப்போதும்
இயக்குனர் எம் சரவணன் இயக்கத்தில் வெளியான எங்கேயும் எப்போதும் திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய. வரவேற்பை பெற்று ஹிட்டடித்தது. ஜெய்,அஞ்சலி,சர்வானந்த்,அனன்யா ஆகியோரின் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி அங்கும் வெற்றி பெற்றது.

தமிழிலும் பிரபலமான நடிகராக
எங்கேயும் எப்போதும் படத்தில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த சர்வானந்த் தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சர்வானந்த் இப்பொழுது அறிமுக இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் டைம் ட்ராவலை மையப்படுத்திய கதையில் நடித்து வருகிறார்

இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில்
இதுவரை குறைந்த பட்ஜெட்டில் தரமான திரைப்படங்களை தயாரித்து வந்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் முறையாக அதிக பட்ஜெட்டில் தயாரித்த சுல்தான் திரைப்படம் கமர்சியல் ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக அந்நிறுவனம் கணம் என்ற படத்தை தயாரித்து வருகிறது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகிறது. தெலுங்கில் இப்படத்திற்கு ஓகே ஓக ஜீவிதாம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அமலா இப்படத்தில் முக்கிய வேடத்தில் ரீ-என்ட்ரி
இதில் ஹீரோவாக சர்வானந்த் நடித்துவருகிறார் ஜோடியாக ரிது வர்மா நடித்து வருகிறார். மேலும் 90களின் தென்னிந்திய ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த நடிகை அமலா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்

டிசம்பர் 27ம் தேதி டீசர்
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் படக்குழு டீசர் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி கணம் டீசர் அப்டேட் வரும் டிசம்பர் 27ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











