»   »  கீர்த்தி சுரேஷ் எதிர்பார்க்க அமலா பாலுக்கு அடிக்குது ஜாக்பாட்?

கீர்த்தி சுரேஷ் எதிர்பார்க்க அமலா பாலுக்கு அடிக்குது ஜாக்பாட்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: அப்பா வயது பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம் அமலா பால்.

பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத் பாலகிருஷ்ணாவை வைத்து படம் எடுக்கிறார். இந்த படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக 3 நடிகைகள் நடிக்கிறார்கள்.

முஸ்கான் என்ற புதுமுக நடிகையை ஏற்கனவே ஒப்பந்தம் செய்துவிட்டார்கள்.

சார்மி

சார்மி

முஸ்கான் தவிர்த்து மற்ற 2 ஹீரோயின் கதாபாத்திரங்களுக்கு அமலா பால் மற்றும் சார்மி ஆகியோரை ஒப்பந்தம் செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.

அமலா பால்

அமலா பால்

திருமண வாழ்க்கை கசந்ததற்கு பிறகு படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் அமலா பால் அப்பா வயது பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

புது ஜோடி

புது ஜோடி

அமலா பால், பாலகிருஷ்ணா இதுரை சேர்ந்து நடித்தது இல்லை என்பதால் இந்த புது ஜோடியை திரையில் காட்ட விரும்புகிறாராம் இயக்குனர் பூரி ஜெகன்னாத்.

சரண்

சரண்

அமலா பால் ஏற்கனவே புதுமுக இயக்குனர் சரண்தேஜின் ஆயுஷ்மான் பவ என்னும் தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்த படத்தில் சரண் தான் ஹீரோ.

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

தெலுங்கு திரையுலகில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க முயன்று வருகிறார் கீர்த்தி சுரேஷ். இதற்காக சீனியர் ஹீரோக்கள் என்றாலும் தயங்காமல் அவர்களுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொள்கிறார். இந்நிலையில் தான் அமலா பால் பாலகிருஷ்ணா ஜோடியாகுகிறார்.

English summary
According to reports, Amala Paul may act as Balakrishna's pair in his upcoming movie to be directed by Puri Jagannadh.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil