Amala Paul: கர்ப்பம் ஆனதை கொண்டாடிய அமலா பால்.. கணவருடன் செம்ம என்ஜாய் போல.. ட்ரெண்டாகும் போட்டோஸ்

சென்னை: கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். இயக்குநர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்த அமலா பால், பின்னர் அவரை பிரிந்தார். இதனையடுத்து கடந்த நவம்பரில் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட அமலா பால் சில தினங்களுக்கு முன்னர் தான் கர்ப்பம் ஆனதை அறிவித்தார். தற்போது கர்ப்பம் ஆனதை தனது கணவருடன் அமலா பால் கொண்டாடியது வைரலாகி வருகிறது.

அமலா பால் கொண்டாட்டம்
கேரளாவை சேர்ந்த அமலா பால், சிந்து சமவெளி என்ற படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். முதல் படத்திலேயே மாமனாரை காதலிக்கும் கேரக்டரில் நடித்து ரசிகர்களை கலங்கடித்தார். அதன் பின்னர் அமலா பால் நடித்த மைனா திரைப்படம் அவருக்கு மிகப் பெரிய அறிமுகம் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வரத் தொடங்கினார்.

 Amala Paul Actress Amala Pauls pregnancy photoshoot is trending

விஜய்யுடன் தலைவா, விக்ரம் ஜோடியாக தெய்வத் திருமகள், தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி, ஆர்யா ஜோடியாக வேட்டை, சூர்யாவுடன் பசங்க 2 என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். கோலிவுட்டில் அமலா பால் மார்க்கெட் உச்சத்தில் இருந்த போதே, 2014ம் ஆண்டு இயக்குநர் ஏஎல் விஜய்யை திருமணம் செய்துகொண்டார். ஆனால், இந்த ஜோடி 2017ல் முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்தது. அதன் பின்னர் மீண்டும் நடிப்பில் பிஸியான அமலா பால், இந்த முறை கவர்ச்சியில் ரொம்பவே எல்லை மீறினார்.

ஒருகட்டத்தில் ஆடை படத்தில் முழு நிர்வாணமாக நடித்து கோலிவுட்டையே அதிர வைத்தார். இந்நிலையில், கடந்தாண்டு நவம்பர் மாதம் தனது நண்பர் ஜகத் தேசாய்யை திருமணம் செய்துகொண்டார். நீண்ட நாட்களாக நண்பர்களாக பழகி வந்த இருவரும் திடீரென திருமண பந்தத்தில் இணைந்தனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத ரசிகர்களுக்கு ஜனவரி மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து சர்ப்ரைஸ் கொடுத்தார்.

திருமணமான இரண்டே மாதங்களில் அமலா பால் கர்ப்பம் ஆனது ரசிகர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியது. ஆனாலும் அமலா பாலுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர். அமலா பாலும் ஜகத் தேசாயும் ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்துகொள்ளும் வகையில் புகைப்படங்கள் வெளியிட்டு கர்ப்பம் ஆனதை அறிவித்திருந்தனர். இந்நிலையில் மீண்டும் அமலா பால் வீட்டில் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.

அமலா பாலும் அவரது கணவரும் ஜோடியாக போட்டோ எடுத்து இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளனர். ”அலைந்து திரிபவர்கள் அனைவரும் தொலைந்து போவதில்லை. சிலர் தங்கள் விசித்திர உலகை கண்டுபிடித்து விடுகின்றனர்” என்ற கேப்ஷனுடன் செம்ம ரொமான்ஸ் செய்துள்ளனர். கர்ப்பம் ஆனதை கொண்டாடும் விதமாக அமலா பால், ஜகத் தேசாய் போட்டோ ஷூட் நடத்தியுள்ளது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X