என்ன.. அமலா பால் இப்படி சொல்லியிருக்காங்க.. அட கொடுமையே.. ரெண்டாவது திருமணத்திலும் பிரச்சனையா?

சென்னை: நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள மீம்ஸ்கள் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

Recommended Video

ரெண்டாவது கல்யாணத்திலும் சிக்கலா? அமலா பால் ஷேர் செய்த மீம்

நடிகை அமலா பால் தமிழில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து மைனா, தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி என்பது உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான குறுகிய காலத்திலேயே விஜய், தனுஷ், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிரும்ட நடித்தார்.

முதல் திருமணம்

முதல் திருமணம்

இயக்குநர் ஏஎல் விஜய் இயக்கத்தில் தெய்வத்திருமகள், தலைவா ஆகிய படங்களில் நடித்தார். அப்போது இயக்குநர் ஏஎல் விஜய்க்கும் அமலா பாலுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனை தொடர்ந்து 2014ஆம் ஆண்டு இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

இவர்களின் திருமண வாழ்க்கை மூன்று ஆண்டுகள் கூட முழுதாக நீடிக்கவில்லை. இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 2017ஆம் ஆண்டு இருவரும் சட்டப்படி விவாகரத்து செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து இயக்குநர் ஏஎல் விஜய் ஐஸ்வர்யா என்ற மருத்துவரை கடந்த ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

காதலருடன் போட்டோ

காதலருடன் போட்டோ

இந்நிலையில் தான் ஒருவரை காதலித்து வருவதாக நடிகை அமலா பால் பேட்டிகளில் கூறி வந்தார். அமலா பால் தனது காதலருடன் லிவிங் டுகேதரில் இருப்பதாக கூறப்பட்டது. அமலா பால் தனது காதலரை கட்டிப்பிடித்திருக்கும் போட்டோக்கள் வெளியானது. ஆனால் அந்த போட்டோவில் இருப்பது அமலா பால் தானா என்ற சந்தேகம் இருந்து வந்தது.

லிப்லாக் போட்டோ

லிப்லாக் போட்டோ

அண்மையில் அந்த சந்தேகத்தை போக்கும் வகையில் அமலா பால் தனது காதலரான பாவ்னிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்ட போட்டோக்கள் வெளியானது. அமலா பால் பாவ்னிந்தர் சிங்குக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் போட்டோக்களும் வெளியானது.

போட்டோக்கள் நீக்கம்

போட்டோக்கள் நீக்கம்

அந்த போட்டோக்களை அமலா பாலின் கணவரான பாவ்னிந்தர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். பின்னர் உடனடியாக அவற்றை நீக்கினார். அமலா பால் இதுவரை தனது திருமணம் குறித்து வாய் திறக்கவில்லை. அமலா பாலின் பேச்சை மீறி அவரது கணவர் போட்டோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக கூறப்பட்டது.

சுமூகமாக இல்லை

சுமூகமாக இல்லை

இதனால் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்த மீம்ஸ் அவர்களின் திருமண உறவு சுமூகமாக இல்லை என்பதை மறைமுகமாக சொல்லும் வகையில் உள்ளது.

பிரிந்துவிட்டார்களா?

பிரிந்துவிட்டார்களா?

இருவரும் இரண்டு ஆண்டுகளாக டேட்டிங் செய்து தற்போது டெல்லியில் ஒன்றாக வசித்து வருகின்றனர். ஆனால் அமலா பால் தனது இன்ஸ்டாவின் ஸ்டோரீஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள மீம்ஸ் அவர்கள் பிரிந்துவிட்டார்களா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

உறவு சரியாக இல்லை

உறவு சரியாக இல்லை

அதாவது பிரேக்ஃபாஸ்ட் அட் டிஃப்பனி (1961) மற்றும் 500 டேஸ் ஆஃப் சம்மர் ஆகிய படங்களின் ஸ்டில்களைப் பயன்படுத்தி, அமலா பால் மீம்ஸ்களை ஷேர் செய்திருக்கிறார். அதன் மூலம் இருவருக்கும் இடையிலான உறவு சரியாக இல்லை என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

சொந்தமானவர் இல்லை

சொந்தமானவர் இல்லை

முதல் மீமில் காதலர் ஐ லவ் யூ என்று கூறுவதாகவும் அதற்கு காதலி அதனால் என்ன என்று கேட்கிறார். உடனே காதலர் உன்னை அதிகமாக காதலிக்கிறேன், நீ எனக்கு சொந்தமானவள் என்கிறார். அதற்கு காதலி இல்லை, யாரும் யாருக்கும் சொந்தமானவர்கள் இல்லை என்று கூறிகிறார்.

பொய் சொல்லவில்லை

பொய் சொல்லவில்லை

மற்றோரு மீமில் காதல் ஜோடி பேசிக்கொள்வது போன்று உள்ளது. அதில் இருவரும் ஐ லவ் யூ என்று சொல்லிக் கொண்டோம். ஆனால் வித்தியாசம் என்னவென்றால் நான் பொய் சொல்லவில்லை என உள்ளது. இந்த மீம் மூலம், அமலா பால் தனது காதலரின் காதல் பொய்யானது என கூறுகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X