கணவர், குழந்தையுடன் கொண்டாட்டத்தில் அமலா பால்.. பீச்சில் செம ஜாலி பண்றாங்க
சென்னை: அமலா பால் தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்தபோது அந்தப் படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இதனையடுத்து அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். கடந்த வருடம் அவருக்கு ஒரு மகன் பிறந்தான். தனது மகனுக்கு இலை என்று பெயர் வைத்திருக்கிறார் அமலா பால். இந்தச் சூழலில் அவர் தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
சிந்து சமவெளி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலா பால். முதல் படம் தோல்வியடைந்தாலும் அந்தப் படத்தின் கதைக்களமும், அமலா பால் ஏற்றிருந்த கதாபாத்திரமும் சர்ச்சைக்குரியதாக இருந்தது. இதன் காரணமாக அமலா பால் பலரது கவனத்துக்கு உள்ளானார். தொடர்ந்து அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அப்படி நடித்த மைனா படம் ஹிட்டாக முன்னணி ஹீரோயின் என்ற இடத்துக்கு நகர்ந்தார். அதற்கு விஜய், ஆர்யா உள்ளிட்டோருடன் இணைந்து நடித்தார்.

ஏ.எல்.விஜய்யுடன் திருமணம்: தலைவா படத்தில் நடித்தபோது அமலா பாலும் இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் காதலித்தனர். பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த ஏ.எல்.விஜய் அமலா பாலை திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்த சூழலில் திடீரென இரண்டு பேரும் விவாகரத்து செய்தனர். அவர்களது விவாகரத்துக்கு காரணமாக பல யூகங்கள் கூறப்பட்டன. ஆனால் அதுகுறித்து இருவரும் அமைதி காக்க ஏ.எல்.விஜய் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
அமலா பாலின் கரியர்: விவாகரத்துக்கு பிறகு அமலா பால் தொடர்ந்து நடித்தார். அந்தவகையில் ரத்னகுமார் இயக்கத்தில் அவர் நடித்த ஆடை படத்தில் நிர்வாணமாக தோன்றி பரபரப்பாக பேசவைத்தார் அமலா பால். தொடர்ந்து கடாவர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதற்கிடையே அமலா பால் பாடகர் பவிந்தர் சிங் என்பவரை காதலிப்பதாகவும் இருவருக்கும் திருமணமே நடந்துவிட்டதாகவும் தொடர்ந்து பேசப்பட்டுவந்தது. ஆனால் அமலா பால் அமைதியாகவே இருந்தார்.
இரண்டாவது திருமணம்: இந்தச் சூழலில் ஜகத் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் அமலா பால். கர்ப்பமாக இருந்தபோது ஆடுஜீவிதம் படத்தில் நடித்திருந்தார். கடந்த வருடம் அவருக்கு மகன் பிறந்தார். மகனுக்கு இலை என்று பெயர் வைத்திருக்கிறார். தற்போது தன்னுடைய மகனை வளர்ப்பதில் பிஸியாக இருக்கிறார். இதன் காரணமாக அவர் மீண்டும் சினிமாக்களில் நடிப்பாரா மாட்டாரா என்கிற கேள்வி அவரது ரசிகர்களிடையே பலமாகவே எழுந்திருக்கிறது.

ட்ரெண்டாகும் வீடியோ: மகன் பிறந்ததைத் தொடர்ந்து தனது கணவர் மற்றும் மகனுடன் ஜாலியாக நேரத்தை செலவிட்டுவருகிறார் அமலா பால். அதுதொடர்பான வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வது வழக்கம். அந்தவகையில் இப்போதும் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார் அவர். அதில் வீக் எண்ட்டை முன்னிட்டு தனது கணவர் மற்றும் மகனுடன் புதுச்சேரி ஆரோவில் பீச்சுக்கு சென்றதாக குறிப்பிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அவரது கணவர் தங்களது மகனை இடுப்பில் வைத்தபடி சைக்கிள் ஓட்டும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. மேலும், குழந்தையுடன் தாங்கள் இருக்கும் புகைப்படங்கள் உள்ளிட்டவைகளையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கின்றன.


Click it and Unblock the Notifications











