Amala Paul: அமலா பால் நெஞ்சில் நண்டு போல விரல் வித்தை காட்டும் கணவர் தேசாய்.. ரொமான்டிக் வீடியோ

சென்னை: நடிகை அமலா பால், தென்னிந்திய சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். 'மைனா' முதல் 'ஆடுஜீவிதம்' வரை அவரது யதார்த்தமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பான இவர், தனது தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகளை வெளிப்படையாகப் பகிர தயங்குவதில்லை. சமீபத்தில், அவர் தனது கணவருடன் செம ரொமான்டிக்காக இருக்கும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அமலா பால் தொடர்பான தகவல்கள் அண்மைக்காலமாக இணையத்தில் பெரும் வைரலாகி வருகின்றன. திருமணத்திற்குப் பிறகு சினிமா, ஆன்மிகம், சுற்றுலா எனப் பலவற்றில் சுழன்று வரும் இவர், எப்போதும் உற்சாகத்துடன் காணப்படுகிறார். "தலைவி எப்பவும் வேற லெவல்" என ரசிகர்கள் ஹார்ட் எமோஜிகளை பறக்கவிடும் அளவுக்கு அமலா பாலும் அவரது ரசிகர்களும் தனி ரசனையில் இருக்கிறார்கள்.

Amala Paul And Her Husband Desaii Romantic Video Which Cross Cinema Romantic Scenes

தற்போது, அமலா பால் ஒரு கலகலப்பான வார இறுதி பார்ட்டியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கடந்த வார இறுதியில் பகிர்ந்திருந்தார்.. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவின. இந்தப் புகைப்படங்களில், அமலா பால் ஒரு பிரம்மாண்டமான பாட்டிலுக்கு அருகில் அமர்ந்திருந்தார். மேலும், இரண்டு கண்ணாடி டம்ளர்களில் மதுபானம் இருப்பது போலவும் காணப்பட்டது.

புகைப்படங்கள் ஒருபுறம் இருக்க, தனது கணவருடன் யார் முதலில் 'ஷாட்ஸ்' குடிப்பது எனப் போட்டியிடும் ஒரு வீடியோவையும் அமலா பால் பகிர்ந்திருந்தார். இதைக் கண்ட ரசிகர்கள், "இவ்வளவு பெரிய பாட்டிலா? அமலா பால் செம லூட்டி போலயே!" என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் போட்டனர். திரையில் தீவிரமான கதாபாத்திரங்களில் நடிக்கும் அமலா பால், நிஜத்தில் இவ்வளவு உற்சாகமாக இருப்பதைப் பார்த்து இணையவாசிகள் ஆச்சரியப்பட்டனர்.

சோ க்யூட்: தொடர்ந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் அமலா பால் தனது கணவருடன் செம நெருக்கமாக செம ரொமான்டிக்காக இருக்கும் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் தனது கணவரின் கண்களைப் பார்ப்பதற்கு முன்னரே, நான் அவரைப் பார்த்தால் அவர் காதலில் விழக் கூடும் என்று சிரித்துக் கொண்டு வாஞ்சையாக கூறுகிறார்.

Amala Paul And Her Husband Desaii Romantic Video Which Cross Cinema Romantic Scenes

ரொமான்ஸ்: அதேபோல் அவரது கணவர் தேசாய், அமலா பாலை தன்னை நோக்கி இழுத்து, மிகவும் ரொமான்டிக்காக கட்டிப் பிடிக்கிறார். தொடர்ந்து, தனது விரல்களை அமலா பாலின் நெஞ்சில் வைத்து, நண்டு நடந்து செல்வது போல கழுத்து வரை அழகாக கொண்டு செல்கிறார். இவர்களின் இந்த வீடியோ சினிமா காட்சியைப் போல இருப்பதால் பலரும் இவர்கள் இருவரை வைத்தே செம ரொமான்டிக் லவ் ஸ்டோரியை படமாக்கலாம் போலயே என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X