Amala Paul: கணவரோடு போட்டி போட்டு குடிக்கும் அமலா பால்.. முரட்டு பார்ட்டி போலயே.. லுக்கை பார்த்தீங்களா?

கோவா: தென்னிந்திய சினிமா உலகில் தனக்கென ஒரு தனிப் பாதையை உருவாக்கி வருபவர் நடிகை அமலா பால் (Amala Paul). 'மைனா' படம் தொடங்கி இன்று 'ஆடுஜீவிதம்' வரை தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர். எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அமலா பால், தனது வாழ்க்கை முறையை வெளிப்படையாக ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் தயக்கம் காட்டாதவர். இப்படி இருக்கும் அமலா பால், தற்போது வீக் எண்டில் ஒரு முரட்டு பார்ட்டி மோடிற்கு (Amala Paul Viral Party) மாறி அதகளம் செய்துள்ளார். இந்த பார்ட்டி கோவாவில் நடைபெற்றுள்ளது. உடன் அவரது கணவரும் இருந்துள்ளார்.

நடிகை அமலா பால் குறித்த செய்திகள் அண்மைக்காலமாகவே இணையத்தில் செம வைரல். திருமணத்திற்குப் பிறகு சினிமா, ஆன்மிகம், பயணம் என ரவுண்டு கட்டி வரும் அமலா பால், எப்போதுமே செம எனர்ஜியுடன் இருப்பவர். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் வந்தால் கூட, "தலைவி எப்பவும் வேற லெவல்" என்று ஹார்ட்டின்களைப் பறக்கவிடும் ரசிகர்கள் ஒருபுறம் என, அமலா பாலும் அவரது ரசிகர்களும் எப்போதுமே கூலான வேவ் லென்த்தில் இருக்கிறார்கள்.

Amala Paul and Her Husband Jagat Desai s Goa Party Shots Giant Bottles and Pure Energy See Viral Pics and Video

பார்ட்டி மோடில் அமலாபால்: இப்படி இருக்கும் போது, அமலா பால் தற்போது ஒரு செம ஜாலியான வீக் எண்ட் பார்ட்டியில் ஈடுபட்டுள்ளார் போலத் தெரிகிறது. குறிப்பாக அவர் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்தப் புகைப்படத்தில் கையில் ஒரு மெகா சைஸ் பாட்டிலுக்கு அருகில் அமர்ந்துள்ளார். இது மட்டும் இல்லாமல் இரண்டு கண்ணாடி டம்ளர்களில் மதுபானம் இருப்பது போலத் தெரிகிறது.

பெரிய சைஸ் பாட்டில்: அமலா பால் அந்த மெகா சைஸ் பாட்டிலுக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டு, அவர் கொடுத்த லுக்கைப் பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர். பெரிய சைஸ் பாட்டில், அதிரடி லுக் என அமலா பால் முழுமையான பார்ட்டி மோடிற்கு மாறிவிட்டார் போல என்று கமெண்டுகளை அள்ளித் தெளித்து வருகிறார்கள். இந்தப் புகைப்படங்களை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது மட்டும் இல்லாமல் தனது கணவருடன் போட்டி போட்டுக் கொண்டு ஷாட்ஸ் குடிக்கும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

ரசிகர்கள் ஷாக்: இதைப் பார்த்த ரசிகர்கள், "இவ்வளவு பெரிய பாட்டிலா? அமலா பால் செம லூட்டி போலயே!" என்று ஆச்சரியத்துடன் பதிவிட்டு வருகிறார்கள். திரையில் சீரியஸான கதாபாத்திரங்களில் தோன்றும் அமலா பால், நேரில் இவ்வளவு ஜாலியாக இருப்பதைப் பார்த்து நெட்டிசன்கள் அந்தப் புகைப்படங்களைச் வைரலாக்கி வருகின்றனர்.

Amala Paul and Her Husband Jagat Desai s Goa Party Shots Giant Bottles and Pure Energy See Viral Pics and Video

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X