அமலா பாலுக்கு ஆண் குழந்தையா?.. பெண் குழந்தையா?.. கணவருடன் என்ன விளையாட்டு விளையாடுறாரு பாருங்க!
சென்னை: ஜகத் தேசாய் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்ட நடிகை அமலா பால் கர்ப்பமான நிலையில், கணவருடன் விளையாடிய விளையாட்டு குறித்த புகைப்படங்களை தற்போது சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளார். சிந்து சமவெளி படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமான அமலா பால் அதற்கு முன்னதாக மலையாளத்தில் நீலதாமரா படத்தில் நடித்திருந்தார்.
இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தெய்வத் திருமகள் படத்தில் நடித்த அமலா பால் தொடர்ந்து ஏ.எல். விஜய் இயக்கத்தில் தலைவா, தியா உள்ளிட்ட சில படங்களில் நடித்த நிலையில், ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் சினிமாவில் நடித்து வந்த அமலா பால் குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனைகள் கிளம்ப விவகாரத்து செய்து பிரிந்தார்.

ஆன்மிகத்தில் ஈடுபாடு: ஈஷா யோகா மையம், பாலி தீவுகளில் உள்ள ஆன்மிக இடங்களுக்கும், ரிஷிகேஷ் உள்ளிட்ட ஆன்மிக இடங்களுக்கும் சென்று வந்தார். அமலா பால் என்ன சாமியாராக மாறப்போகிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், அதெல்லாம் இல்லைங்க சம்சாரி தான் ஆகப் போகிறேன் என திடீரென கடந்த நவம்பர் மாதம் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

மலாசனம்: சமீபத்தில் கடற்கரையின் பாறை மீது அமர்ந்து கொண்டு கர்ப்பமான நேரத்தில் இப்படி மலாசனம் செய்தால் நல்லது என வீடியோ வெளியிட்டு இருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் டபுள் மீனிங் கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வந்தனர். தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் கொஞ்சிக் கொண்டிருக்கும் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வரும் அமலா பால் சமீபத்தில் நீச்சல் குளத்தில் இருவரும் செய்த சேட்டை வீடியோக்களையும் வெளியிட்டு இருந்தார்.

ஆண் குழந்தையா? பெண் குழந்தையா?: அமலா பால் கர்ப்பமாக உள்ள நிலையில், அவரது வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையா? அல்லது பெண் குழந்தையா? என்பதை கண்டறியும் விதமாக ஒரு விளையாட்டு விளையாடி உள்ளார்.
அதன் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ட்வின்ஸ் பிறந்தால் செமையா இருக்கும் என்றும் கண்டிப்பாக அமலா பாலுக்கு பெண் குழந்தை தான் பிறக்கும் என ரசிகர்கள் ஆருடம் பார்த்து வருகின்றனர். எந்த குழந்தை பிறந்தாலும் ஹேப்பியா அமலா பாலிடம் வளரப் போகிறது என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











