எல்லாமே அமலா பாலுக்காக.. வெறும் உடம்புடன் கொட்டும் பனியில் 2வது கணவர் என்னம்மா வித்தை காட்டுறாரு!

சென்னை: தமிழ் சினிமாவில் சில முன்னணி நடிகைகள் முதல் திருமணத்தில் சந்தோஷமாக இல்லை என்பதால், இரண்டாவது திருமணத்தை செய்துக் கொண்டு ஜாலியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். சிலர் 2வது திருமணத்தை தாண்டி 3வது திருமணத்தையும் செய்து கொள்கின்றனர்.

சில ஹீரோயின்கள் கடைசி வரை சினிமா மட்டும் தான் என்றும் திருமண வாழ்க்கை, குழந்தை பேறு எல்லாம் வேண்டாம் என ஒதுங்கி விடுவதையும் காண முடிகிறது. அதே போல நடிகைகள் சிலர் ஹீரோக்களை விட்டு விட்டு இயக்குநர்களை காதலித்து திருமணம் செய்து கொள்வதையும் பார்க்க முடிகிறது.

Amala Paul and Jagat Desai New Year Holiday Destination and their fun videos trending

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் தெய்வத் திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களில் நடித்த அமலா பால் அவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், முதல் திருமணம் பெரிதாக ஒத்துவராத நிலையில், 2வதாக ஜகத் தேசாய் எனும் தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார். அவருடன் டிசம்பர் மாத குளிரை கொண்டாட பனி பிரதேசத்துக்கு சென்றுள்ள நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட வீடியோவும், அமலா பாலுக்காக ஜகத் தேசாய் செய்த சாகசங்களும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

2வது திருமணத்தில் ஹேப்பி: சமந்தாவுக்கு முன்பாகவே 2வது திருமணத்தை செய்துக் கொண்டு சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் நடிகை அமலா பால். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்தும் 2வது திருமணம் செய்துக் கொண்டு சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். நடிகை அமலா பால் ஜகத் தேசாயை காதலித்து திருமணம் செய்ததில் இருந்தே ஏகப்பட்ட இடங்களுக்குச் சுற்றுலா சென்று ஜாலியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார். அழகான ஆண் குழந்தையும் பெற்றெடுத்து இலை எனப் பெயரிட்டு வளர்த்து வருகிறார்.

கஜகஸ்தானில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: நடிகை அமலா பால் மற்றும் ஜகத் தேசாய் இருவரும் இந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கஜகஸ்தானில் உள்ள அஸ்தானா (Asatana) எனும் இடத்திற்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளனர். அங்கே எடுத்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

கொட்டும் பனியில் உடற்பயிற்சி: நடிகை அமலா பாலின் கணவர் ஜகத் தேசாய் அங்கே கொட்டும் பனியில், வெட்ட வெளியில் வெறும் உடம்பில் தண்டால் எடுப்பதுமாகவும், ஓடுவதுமாகவும் உடற்பயிற்சி செய்த வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளார். எல்லாமே அமலா பாலுக்காகத்தானே என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X