Amala Paul: காதல் ததும்ப கணவருடன் கொஞ்சி விளையாடும் அமலா பால் - இணையத்தைக் கலக்கும் லவ்லி வீடியோ
சென்னை: நடிகை அமலா பால் தென்னிந்திய சினிமாவில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள, பெரும் ரசிகர்கள் பட்டாளத்தால் கவனிக்கப்படுகிற, நடிகை. அமலா பால், அவரது கணவர் தேசாய் மகன் இலாய் என இவர்கள் குடும்பம் குறித்த அப்டேட்களை தெரிந்து கொள்ள ரசிகர்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்கள். இப்படி இருக்கையில் நடிகை அமலா பால் மற்றும் அவரது கணவர் தேசாய் என இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அமலா பால் மற்றும் தேசாய் தம்பதியர் கடந்த 2023ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கடந்த 2024 ஆம் ஆண்டில் இலாய் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டது குறித்து அமலா பால் சமீபத்தில் தெரிவித்த கருத்து பலருக்கும் கொஞ்சம் சர்ப்ரைஸாகத்தான் இருந்தது.
அதாவது, " முதலில் நானும் தேசாயும் திருமணம் செய்யும் எண்ணத்திலேயே பழகவில்லை. சும்மா டேட் செய்து பார்க்கலாம் என்று, நாங்கள் டேட் செய்து பார்த்தோம். அப்புறம் பார்த்தால் நாங்கள் கர்ப்பமாகிவிட்டோம். கர்ப்பமாகிவிட்டால் திருமணம் செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை தானே என்று தெரிவித்தார். அமலா பாலின் இந்த திருமண கதை பலருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தது.

ரசிகர்கள் வரவேற்பு: இப்படி இருக்கையில் நடிகை அமலா பால் மற்றும் அவரது கவணர் தேசாய் இணைந்து தொடர்ந்து ரொமான்டிக்கான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள். அவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அவர்கள் இதேபோல் அன்புடனும் காதலுடனும் என்றென்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும் வாழ்த்தி வருகிறார்கள். மேலும் பலர் இவர்களைப் போன்ற லைஃப் பார்ட்னர் அமைய வேண்டும் என்றும் ஆசைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
காதல் ததும்பும் வீடியோ: இப்படி இருக்கையில் அமலா பால் மற்றும் அவரது கணவர் தேசாய் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமீபத்திய வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதாவது இருவரும் கூத்துப்பட்டறையில் இருப்பது போலத் தெரிகிறது. அதில் அமலா பாலை தூக்கி, அவரது கணவர் தேசாய் ஒரு குழந்தையை சுற்றுவது போல சுற்றுகிறார். அமலா பாலும் சிரித்துக் கொண்டே இருக்கிறார். இந்த வீடியோவில் இருவருமே காதல் ததும்ப ததும்ப இருப்பதால் ரசிகர்கள் பலரும் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இந்த ரொமாண்டிக் சினிமாவை விட தூக்கலாக இருக்கிறதே என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











