twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நல்லதும் கெட்டதும் கலந்து இருக்கக் கூடாதா? சுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகை அமலா பால் ட்வீட்!

    |

    சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகை அமலா பால் போட்டுள்ள ட்வீட் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

    ஒன்று வெள்ளையாக இருக்கணும் இல்லை கருப்பாக இருக்கணும் மாறாக கிரே ஷேடுடன் இருக்கக் கூடாதா என லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை பதிவிட்டு அமலா பால் கேள்வி எழுப்பி உள்ளார்.

    விறுவிறுப்பாக ரெடியாகும் அந்தகன்… விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு !விறுவிறுப்பாக ரெடியாகும் அந்தகன்… விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

    மேலும், நம்முடைய சுதந்திரத்தை மற்றவர்கள் ஏன் முடிவு பண்ண வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

    நடிகர்கள் வாழ்த்து

    நடிகர்கள் வாழ்த்து

    75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏகப்பட்ட பிரபலங்கள் பெருமிதத்துடன் ட்வீட் போட்டு சுதந்திர தின வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். அமிதாப் பச்சன், மோகன்லால், தனுஷ், சிவகார்த்திகேயன் என ஏகப்பட்ட பிரபலங்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.

    தேசியக் கொடி டிசர்ட்

    தேசியக் கொடி டிசர்ட்

    நடிகர்களை போலவே பாலிவுட் முதல் கோலிவுட் வரை ஏகப்பட்ட நடிகைகளும் தேசியக் கொடியுடன் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். நடிகை அதுல்யா ரவி தேசியக் கொடி போட்ட டிசர்ட்டை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வைரலாக்கி வருகிறார்.

    ஷேட்ஸ் ஆஃப் கிரே

    ஷேட்ஸ் ஆஃப் கிரே

    ஷேட்ஸ் ஆஃப் கிரேவாக இருக்க ஏன் இங்கே இடம் இருப்பதில்லை என்கிற கேள்வியுடன் ட்வீட் போட்டுள்ள நடிகை அமலா பால், நாம் ஏன் ஒன்று கருப்பாக இருக்கணும் அல்லது வெள்ளையாக இருக்கணும் என நிர்பந்திக்கப் படுகிறோம் என்கிற கேள்வியையும் எழுப்பி உள்ளார். நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நாமே தீர்மானிக்க வேண்டிய சுதந்திரத்தை பெறுவோம் என்றும் ட்வீட் போட்டு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

    என்ன சொல்ல வருகிறார்

    என்ன சொல்ல வருகிறார்

    ஒன்று நல்லவராகவோ அல்லது கெட்டவராகவோ தான் ஒருவர் இருக்க வேண்டும் என இந்த சமூகம் ஏன் நிர்பந்திக்கிறது என்கிற கேள்வியைத் தான் நடிகை அமலா பால் கேட்டுள்ளார். நல்லதும் கெட்டதும் கலந்த மனிதராக நமக்கு பிடித்தபடி வாழ இங்கே ஏன் சுதந்திரம் இல்லை என்று கேட்டு இருக்கிறார்.

    கட்டுப்படுத்தும் சொசைட்டி

    கட்டுப்படுத்தும் சொசைட்டி

    மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சொசைட்டி எனும் தலைப்பில் நாடியா என்பவர் எழுதிய கவிதையையும் ஷேர் செய்திருக்கிறார் நடிகை அமலா பால். அதில், இந்த சமூகம் ஏன் நீங்கள் செல்ல வேண்டிய பாதையை தீர்மானிக்கிறது என்றும், அங்கே சென்றால் குற்றம், அதை செய்தால் குற்றம் என உங்களுடைய கனவுகளை தடுத்து நீங்கள் உயர பறப்பதை தவிர்க்கிறது என எழுதியுள்ள கவிதையையும் ஷேர் செய்து இருக்கிறார் அமலா பால்.

    வெப்சீரிஸ் வெற்றி

    வெப்சீரிஸ் வெற்றி

    காஜல் அகர்வால், தமன்னா, சமந்தாவை தொடர்ந்து நடிகை அமலா பால் நடிப்பில் தெலுங்கில் வெளியான குடி எடமாயித்தே வெப்சீரிஸ் டைம் லூப் கான்செப்ட்டை மையமாக வைத்து உருவாகி இருந்தது. அதில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த நடிகை அமலா பால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை அள்ளி இருந்தார்.

    ஹாட் போட்டோக்கள்

    ஹாட் போட்டோக்கள்

    ஒரு பக்கம் இப்படி தத்துவங்களை பொழிந்து வரும் நடிகை அமலா பால் மறுபக்கம் ஹாட் போட்டோஷூட்களையும் நடத்தி தொடர்ந்து தனது ரசிகர்களுடன் டச்சில் இருந்து வருகிறார். ஆயிரக் கணக்கான போஸ்ட்டுகளை போட்டும் இன்னமும் 4 மில்லியன் ரசிகர்களை கூட அமலா பால் சேர்க்காதது அவருக்கு மிகப்பெரிய வருத்தம் தான்.

    English summary
    Actress Amala Paul tweeted, “Why is there no space for shades of grey? Why are we supposed to choose between either black or white? Strive for the freedom to be whatever you want to be.”
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X