என்ன அமலா பால் இவ்ளோ சீப்பா காதலர் தினத்தை முடிச்சிட்டாரு.. மடி மீது தலை வைத்து.. வேறலெவல் பிக்!
சென்னை: கர்ப்பமான அறிவிப்பை வெளியிடவே ஒரு வாரம் வீடியோக்களையும் போட்டோக்களையும் இன்ஸ்டாகிராமே திணறும் வண்ணம் பதிவிட்டு வந்த நடிகை அமலா பால் 2வது திருமணம் முடிந்த நிலையில், காதலர் தினத்தை என்னத்த பெருசா செலிபிரேட் பண்றது என ஆசிரமத்தில் கணவருடன் தஞ்சம் அடைந்து விட்டார் போலத்தான் தெரிகிறது.
கோவா, பாலி தீவு என சுற்றித் திரிந்து வந்த அமலா பால் தற்போது கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் தான் காதலர் தினத்தை கொண்டாடி உள்ளார். விரைவில் மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ள நிலையில், இப்போதே அங்கே உள்ள யோகா மையத்தில் தனது கணவருடன் வந்து விட்டார்.

கடந்த ஆண்டு திருமணம்: இயக்குநர் ஏ.எல். விஜய் படங்களில் நடித்து வந்த அமலா பால் அவரையே காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். அதன் பின்னர், திருமண வாழ்க்கையில் பூகம்பம் வெடித்த நிலையில், விவாகரத்து செய்து பிரிந்தார். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடுடன் செயல்பட்டு வந்த அமலா பால் ஈஷா யோகா மையத்தில் அதிக நாட்களை செலவிட்டு வந்தார். ஜகத் தேசாய் என்பவரை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென காதலிப்பதாக அறிவித்து திருமணமும் செய்துக் கொண்டார்.

கர்ப்பத்துடன் போட்டோஷூட்: திருமணமான வேகத்தில் இந்த முறை குழந்தையை பெற்றுக் கொள்ளவும் முடிவு செய்த அமலா பால் கர்ப்பமானார். பேபி பம்ப் உடன் அவர் கணவர் ஜகத் தேசாய் உடன் எடுத்துக் கொண்ட கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார்.

காதலர் தின கொண்டாட்டம்: சினிமா நடிகைகள் பலர் தங்கள் காதலர்களுடன் இன்று காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். புதிதாக திருமணமானவர்கள் தங்கள் மனைவியுடன் காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், நடிகை அமலா பாலும் காதலர் தினத்தைக் கொண்டாடிய புகைப்படம் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

மடியில் படுத்து கொண்டாட்டம்: காதலர் தினத்திற்கு வெளிநாட்டுக்கோ அல்லது தீவுகளுக்கோ செல்லாமல் வெறும் மரத்தடியில் கணவர் மடியில் படுத்துக் கொண்டு சிம்பிளாக கொண்டாடும் புகைப்படத்தை நடிகை அமலா பால் தற்போது வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் இதுதான் ரியல் காதலர் தின கொண்டாட்டம் என கமெண்ட் போட்டு வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











