கலர் குருவி ஹேர் ஸ்டைலில் அமலாபால்.. வைரலாகும் புகைப்படம்!
கொச்சி : தமிழில் எந்த ஒரு நடிகையாலும் ஈடுகொடுக்க முடியாத அளவிற்கு புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு ட்ரெண்டிங்கில் இருந்து வருபவர் நடிகை அமலா பால்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர், சமீபகாலமாகவே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
ஆடை திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இப்போது "அதோ அந்த பறவை போல" திரைப்படத்தில் பக்கா ஆக்சன் காட்சிகளில் லீட் ரோலில் நடித்து வரும் இவர் இப்பொழுது கலர் கலர் உடையில் குருவி ஹேர் ஸ்டைலில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கவர்ச்சியும் கொஞ்சம்
சோசியல் மீடியாவில் என்ன பதிவு போட்டாலும் ட்ரெண்டாகி வருவது நடிகை அமலாபாலுக்கு மட்டுமே என்று சொல்லலாம் அந்த அளவிற்கு இவரை பின் தொடரும் ரசிகர்களின் கூட்டம் எக்கச்சக்கமாக நாளுக்கு நாள் உயர்ந்து வர இவர் பதிவிடும் புகைப்படங்களில் கவர்ச்சியும் கொஞ்சம் தூக்கலாகவே இருந்துவருகிறது.

ஆக்சன் காட்சிகளில்
ஆடை திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அமலாபால் "அதோ அந்த பறவை போல" திரைப்படத்தில் பலரும் வியந்து பார்க்கும் அளவிற்கு ஆக்சன் காட்சிகளில் பட்டையை கிளப்பி இருக்க இந்த திரைப்படம் மிக விரைவிலேயே திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"லஸ்ட் ஸ்டோரிஸ்"
சமூக வலைதளங்களில் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் சர்ச்சைகளில் சிக்கி வரும் அமலாபால், இந்தியில் வெளியான "லஸ்ட் ஸ்டோரிஸ்" என்ற அடல்ட் கன்டென்ட் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருவதோடு அடுத்த சர்ச்சையும் மிக விரைவில் உருவமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிக முக்கியமானவராக
இந்த நிலையில் சோசியல் மீடியா பக்கங்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வரும் நடிகைகளில் அமலாபால் மிக முக்கியமானவராக உள்ள நிலையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை மகிழ்வித்தாலும் மற்றொருபுறம் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.

டி ஷர்ட்-க்கு பைஜாமா
அந்த வகையில் இப்பொழுது கலர் குருவி போல தலையில் கலர் கலராக வண்ணம் பூசி ஜடை போட்டுக் கொண்டு டி ஷர்ட்-க்கு பைஜாமா என்ற வித்தியாசமான காம்பினேஷன் உடன் நட்சத்திர விடுதியின் திசைக்காட்டியின் அருகில் செம ஸ்டைலிஷாக நின்று போஸ் கொடுத்திருக்க அமலாபாலின் இந்த லேட்டஸ்ட் போட்டோஸ் இப்பொழுது மீண்டும் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











