»   »  பஞ்சாயத்தான காரிலேயே புதுச்சேரிக்கு போய் கண் தானம் செய்த அமலா பால்!

பஞ்சாயத்தான காரிலேயே புதுச்சேரிக்கு போய் கண் தானம் செய்த அமலா பால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
காரால வீனா போன அமலா பால் கண் தானம் பண்ணிருக்காங்க!- வீடியோ

கொச்சின் : நடிகை அமலா பால், புதுச்சேரியில் சொகுசு கார் பதிவு செய்ததன் மூலம் 20 லட்சம் ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதே சொகுசு காரில் புதுச்சேரியில் நடைபெற்ற விழா ஒன்றுக்கு சென்றுள்ளார். அமலா பாலின் சொகுசு காரை புதுச்சேரி மக்கள் ஆச்சரியமாக பார்த்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த விழாவில் அமலா பால் தன்னுடைய கண்களை தானமாக வழங்குவதாகக் கையொப்பமிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

வரி ஏய்ப்பு புகார்

வரி ஏய்ப்பு புகார்

நடிகை அமலா பால் ஒரு கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொகுசு கார் வாங்கி, அதனை போலி முகவரி கொடுத்து புதுச்சேரியில் பதிவு செய்ததன் மூலம் 20 லட்சம் ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அவர் மீது கேரள மாநில குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அமலாபால் ஜாமீனில் விடுவிப்பு

அமலாபால் ஜாமீனில் விடுவிப்பு

சமீபத்தில் விசாரணைக்கு ஆஜராகி சரணடைந்த அமலா பாலை கைது செய்த போலீசார், கேரள உயர்நீதிமன்றம் அளித்த முன்ஜாமீனை அடிப்படையாகக் கொண்டு ஒரு சில மணி நேரத்தில் சொந்த ஜாமீனில் அவரை விடுவித்தனர். அமலாபால் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெறுகிறது.

அதே சொகுசு காரில்

அதே சொகுசு காரில்

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய அதே சொகுசு காரில் புதுச்சேரியில் நடைபெற்ற விழா ஒன்றுக்கு சென்றுள்ளார் அமலா பால். வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே அவர் அதே காரில் சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கண் தானம்

கண் தானம்

அமலாபாலின் சொகுசுக்காரை புதுச்சேரி மக்கள் ஆச்சரியமாக பார்த்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த விழாவில் அமலாபால் தன்னுடைய கண்களை தானமாக வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

கவலை

கவலை

கண்தானம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமலாபால் கூறியதாவது "உலக அளவில் இந்தியாவில் தான் கண்பார்வை அற்றவர்கள் அதிகம் என்ற தகவல் அதிச்சியளிக்கின்றது. கண்தானம் விழிப்புணர்வை மக்களிடம் அதிகம் ஏற்படுத்த வேண்டும்." என்று கூறியுள்ளார்.

வழக்கு நிலுவையில்

வழக்கு நிலுவையில்

புதுச்சேரியில் கார் பதிவு செய்த விவகாரம் பற்றிக் கேட்டதற்கு, "அந்த விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் இதுகுறித்து கருத்து கூற முடியாது" எனத் தெரிவித்துள்ளார் அமலாபால்.

English summary
A suit filed against Amala paul for registering a luxury car in Puducherry. Amala Paul went to puducherry on the same luxury car. Amala Paul has donated his eyes and surprised everyone in this event.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil