நிறைமாத கர்ப்பத்துடன் பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட அமலா பால்..பார்த்து ஜாக்கிரதை என பதறும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை அமலா பால் கர்ப்பமாகி அதற்குள் 7 மாதங்கள் நிறைவடைந்து விட்டன. பொதுவாக 7வது மாதம் 9வது மாதங்களில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறும். அலுங்காமல் குலுங்காமல் பெண்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். ஆனால், நடிகை அமலா பால் ஆட்டம் பாட்டத்துடன் பார்ட்டி பண்ணி தனது 7வது மாதத்தை கொண்டாடி உள்ளார்.
நீலத்தாமரா எனும் மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அமலா பால் தமிழில் சிந்து சமவெளி படத்தின் மூலம் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அறிமுகமானார்.

முதல் படத்தின் கதையே வில்லங்கமாக இருந்த நிலையில், ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்தன. ஆனால், அதையெல்லாம் அடுத்து வந்த அவரது மைனா திரைப்படம் சரி செய்து அமலா பாலை முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் மாற்றியது.
2வது திருமணம்: தெய்வத்திருமகள் படத்தின் மூலம் ஏ.எல். விஜய் இயக்கத்தில் நடித்த அமலா பால் தலைவா படத்திலும் அவர் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாகவே நடித்தார். இருவரும் காதலித்த நிலையில், திருமணம் செய்துக் கொண்டனர். ஆனால், தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த நிலையில், குழந்தையை பெற்றுக் கொள்ளவில்லை. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், ஜகத் தேசாய் என்பவருடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.
7 மாசம் கர்ப்பம்: அமலா பால் தற்போது 7 மாதங்கள் கர்ப்பமாக உள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார். கர்ப்பமாக உள்ள நிலையில், ஹெவியாக பார்ட்டி கொண்டாடும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.
கர்ப்பத்துடன் குத்தாட்டம்: தனது கணவர் ஜகத் தேசாய் உடன் ஜாலியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் அமலா பால் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் அதனை கொண்டாடும் விதமாக நண்பர்களுடன் நடத்திய சரக்கு பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளார்.
பார்த்து பத்திரமாக: அமலா பால் நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், இப்படியெல்லாம் பார்ட்டி பண்ணி குதித்து ஆடலாமா என நெட்டிசன்கள் சிலர் கமெண்ட் போட்டு வருகின்றனர். அமலா பால் எப்படி அவங்க பிரெக்னன்ஸியை என்ஜாய் பண்றாங்க பாருங்க என அவரது ரசிகர்கள் கமெண்ட் போட்டு பொறாமைப்பட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











