வீட்டிலேயே பார்ட்டி.. தம்மாத்துண்டு டிரெஸ்ல இன்னாம்மா டான்ஸ் ஆடுறாரு அமலா பால்.. இதுதான் காரணமாம்!

கேரளா: நடிகை அமலா பால் தனது வீட்டிலேயே பர்த்டே பார்ட்டி ஒன்றை கொண்டாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Recommended Video

தம்மாத்துண்டு டிரெஸ்ல இன்னாம்மா டான்ஸ் ஆடுறாரு அமலா பால்! - வீடியோ

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான அமலா பால், இந்த லாக்டவுனை தனது அம்மாவுடன் கேரளாவில் கழித்து வருகிறார்.

அமலா பாலுக்கு இரண்டாவது திருமணம் ஆனதாக புகைப்படங்களுடன் செய்திகள் வெளியான நிலையில், அதுகுறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும், விளக்கத்தையும் அமலா பால் வெளியிட மறுப்பது குறிப்பிடத்தக்கது.

செம ஆக்டிவ்

செம ஆக்டிவ்

மும்பை பாடகர் பவ்னிந்தர் சிங்குடன் திருமணம் நடைபெற்றதா? இல்லையா? என்பது குறித்து இதுவரை எந்த விளக்கமும் கூற வில்லை என்றாலும், சமூக வலைதளத்தில் செம ஆக்டிவாகத் தான் இருந்து வருகிறார் அமலா பால். தினமும் ஒரு போஸ்ட் என தொடர்ந்து பல பதிவுகளை தனது இன்ஸ்டா பக்கத்தில் டிசைன் டிசைனாக பதிவிட்டு வருகிறார்.

ஹவுஸ் பார்ட்டி

ஹவுஸ் பார்ட்டி

இந்நிலையில், தனது வீட்டில், டிவியில் சத்தமாக பாடல்களை போட்டுக் கொண்டு, முகத்தில் மாஸ்க் அணிந்தபடி, ஆடி பாடி பார்ட்டி செய்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை அமலா பால். தனது சகோதரர் அபிஜித் பாலின் பிறந்தநாள் பார்ட்டியைத் தான் இப்படி கொண்டாடுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

குட்டி டிரெஸ்

குட்டி டிரெஸ்

தம்மாத்துண்டு டிரெஸ் அணிந்துக் கொண்டு, செம ஹாட்டாக அமலா பால் அந்த வீடியோவில் நடனமாடியுள்ளதை பார்த்த அவரது ரசிகர்கள், செம பார்ட்டி என்றும், கண்களுக்கு நல்ல விருந்து கொடுத்துட்டீங்க என்றும் இன்ஸ்டா பக்கத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த நேரத்தில் பார்ட்டி தேவையா எனவும் சிலர் அமலாவை திட்டி வருகின்றனர்.

வைரலாக

வைரலாக

சமீபத்தில், கடற்கரையில் தலை கீழாக யோகா செய்தபடி அமலா பால் பதிவிட்ட அவரது ஒர்க்கவுட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. மேலும், ஓஷோ எழுதிய புத்தகத்தில் இருந்த பெண்கள் அடிமையாகவும், குழந்தை பெற்றெடுக்கும் இயந்திரங்களாகவும் ஆண்களால் பார்க்கப்படுகின்றனர் என்பதை பதிவிட்டும் பாராட்டுக்களை அள்ளினார்.

சினிமா

சினிமா

ஆடையே அணியாமல் அமலா பால் நடித்திருந்த ஆடை படம் கடந்த ஆண்டு வெளியானது. அடுத்ததாக அதோ அந்த பறவை போல படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை அந்த படம் வெளியாகவில்லை. தெலுங்கில் வெப்சீரிஸ், மலையாளத்தில் காடவர் மற்றும் பிருத்வி ராஜின் ஆடு ஜீவிதம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் அமலா பால். பாலிவுட்டிலும் ஒரு படத்தில் கமீட் ஆகியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X