தெலுங்கு படத்தில் அமலா பாலுக்கு ரூ. 1 கோடிக்கு மேல் சம்பளமாமே!!!
ஹைதராபாத்: புதிய தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க அமலா பாலுக்கு ரூ.1 கோடிக்கு மேல் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
மைனா படம் மூலம் பிரபலமான அமலா பால் தற்போது ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில் மற்றும் விஜயுடன் தலைவா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஒரு ரவுண்ட் வந்துள்ள அவர் ஆந்திராவில் தனது திறமையை வெளிப்படுத்தச் சென்றுள்ளார்.
அவர் தற்போது தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதற்கு அம்மணிக்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது.

அமலா பாலை பரிந்துரைத்த அனுஷ்கா
முன்பு அனுஷ்கா தான் அமலா பாலை தெலுங்கு இயக்குனர்களுக்கு பரிந்துரை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனோஜ் மஞ்சு படத்தில் நடிக்க ரூ.1 கோடிக்கு மேல் சம்பளம்
பெல்லங்கொண்டா சுரேஷ் தயாரிப்பில் மனோஜ் மஞ்சுவை வைத்து நாகேஷ்வர ரெட்டி இயக்கும் படத்தில் நடிக்க அமலா பால் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்திற்காக அவருக்கு ரூ.1 கோடிக்கு மேல் சம்பளம் கொடுத்துள்ளார்களாம்.

தமன்னா, காஜல், சமந்தாவுக்கு கோடி தான்
தெலுங்கு திரையுலகில் தமன்னா, காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் ரூ.1 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகின்றனர். தற்போது அந்த பட்டியலில் அமலா பால் சேர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











