Amala Paul: குழந்தை எங்கே?.. கணவருடன் பீச்சில் லிப் கிஸ் அடித்து.. காதலர் தினம் கொண்டாடிய அமலா பால்!

சென்னை: நடிகை அமலா பால் தனது இரண்டாவது கணவருடன் காதலர் தினத்தை கொண்டாடிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த அமலா பால் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் பெரிய பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வருகிறார்.

இயக்குநர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால், அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் விவாகரத்து செய்து பிரிந்தார். மும்பையில் இன்னொருவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையை அமலா பால் வாழ்ந்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பின. அந்த நபருடன் திருமணமும் ஆனதாக புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பினர்.

Amala Paul Valentine s Day 2025 heroine 2025

ஆனால் அந்த நபருடன் தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும் தன்னை ஏமாற்றி தனது அனுமதியின்றி அந்த புகைப்படங்களை அவர் வெளியிட்டார் என அவர் மீது வழக்கு தொடர்ந்து அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சாதனையும் சோதனையும்: சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அமலாபால், மைனா படத்தின் மூலம் கிடைத்த வெற்றி காரணமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இயக்கத்தில் வெளியான ஆடை திரைப்படம் தமிழ் சினிமாவில் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு பதிலாக மார்க்கெட் இழக்கும் நிலைக்கு தள்ளியது. அந்த படத்திற்கு பிறகு சொந்தத் தயாரிப்பில் கடாவர் படத்தை தயாரித்து நடித்த அமலாபாலுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

Amala Paul Valentine s Day 2025 heroine 2025

இரண்டாவது திருமணம்: ராட்சசன், வேலையில்லா பட்டதாரி என பல வெற்றிப் படங்களில் அமலா பால் நடித்துள்ளார். விஜய்யுடன் தலைவா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். சினிமாவில் திடீரென சரிவை சந்தித்த அவர், வெளிநாடுகளுக்கு அடிக்கடி டூர் சென்று வந்தார். திடீரென ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு அமலா பாலுக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. இலை என அந்த குழந்தைக்கு பெயர் வைத்துள்ளார்.

காதலர் தின கொண்டாட்டம்: தனது மகனுடன் தண்ணீர் அருகே விளையாடும் வீடியோவை முன்னதாக வெளியிட்ட அமலாபால் காதலர் தினத்தை முன்னிட்டு தனது கணவருடன் பீச்சில் குழந்தையின் டாய்ஸை வைத்து விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், காதலர் தினத்தை முன்னிட்டு தனது கணவருக்கு ஆசையாக உதட்டில் முத்தம் கொடுக்கும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளன.

குழந்தையுடன் விளையாட்டு: முன்னதாக நடிகை அமலா பால் தனது மகனுடன் விளையாடும் வீடியோவை வெளியிட்டு இவனும் என்னுடன் சேர்ந்து ஊர் சுற்ற ஆரம்பித்துவிட்டான் என பதிவிட்டு இருந்தார். காதலர் தின வீடியோவில் குழந்தையை எங்கே காணோம் என ரசிகர்கள் ஜாலியாக கமெண்ட்டுகளை போட்டு வருகின்றான்ர்.

ஐ லவ் யூ சொல்லும் ஃபேன்ஸ்: அமலா பாலுக்கு 2வதாக திருமணம் நடைபெற்று அவர் குழந்தை பெற்ற நிலையில், அவர் கணவருடன் ஜாலியாக பீச்சில் இருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் இன்னமும் தாங்கள் அமலா பாலை காதலிப்பதாக ஐ லவ் யூ கமெண்ட்களை போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X