வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்

By Siva

Recommended Video

ஆடையில்லாமல் பேப்பரை சுற்றிக் கொண்டு போஸ் கொடுத்த அமலா பால்- வீடியோ

சென்னை: அமலா பால் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆடை படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள ஆடை படத்தின் டீஸர் இன்று மாலை வெளியிடப்படும் என்று அறிவித்தார்கள். அறிவித்தபடி நேரத்தை கடத்தாமல் டீஸரை வெளியிட்டுள்ளனர்.

டீஸரை பார்த்தவர்கள் அனைவரின் கண்களும் விரிந்து, ஓ மை காட் என்று அதிர்ச்சியில் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

ஆடை

ஆடை டீஸரில் என் மகளை காணவில்லை என்று அமலா பாலின் அம்மா போலீசிடம் புகார் தெரிவிக்கிறார். கடைசியா பேசியபோது அவள் குடிச்சிருந்தா சார் என்று அம்மா கூறுகிறார். ஆளாளுக்கு உயரமான கட்டிடத்தை பார்க்க கடைசியில் அமலா பால் உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் இருப்பதை காட்டுவதுடன் டீஸர் முடிகிறது. தன் உடம்பில் துணி இல்லாததை பார்த்து அமலாவே அதிர்ச்சி அடைவது போன்று காட்டியுள்ளனர்.

அமலா பால்

அமலா பால்

ஆடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அமலா பால் ஆடையில்லாமல் டாய்லெட் பேப்பரை சுற்றி மானத்தை மறைத்தடி போஸ் கொடுத்ததை பார்த்தே பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் டீஸரில் அமலா பால் இப்படி நிர்வாணமாக வருவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அதனால் டீஸரை பார்த்த உடன் அதிர்ச்சி ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

கதாபாத்திரம்

கதாபாத்திரம்

கலாச்சாரத்திற்கு பெயர் போன தமிழகத்தில் இப்படி ஆடையில்லாமல் நடித்தால் மக்கள் விளாசுவார்கள் என்பது அமலா பாலுக்கு தெரியாமல் இல்லை. ஆனால் கதைக்கு தேவைப்பட்டதால் துணிந்து நடித்திருக்கிறார். படப்பிடிப்பின்போது அவர் எப்படி நெளிந்தாரோ. அவரின் துணிச்சலை பாராட்டுபவர்கள் பாராட்டினாலும், திட்டுபவர்கள் திட்டத் தான் செய்கிறார்கள்.

கவனம்

கவனம்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரால் தான் ஆடை படம் பற்றி அனைவரும் பேசினார்கள். ஆனால் தற்போது டீஸரை பார்த்த பிறகு அப்படி என்ன சூழலில் அமலா பால் சிக்கினார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. டீஸரை பார்த்தால் பெரிய நிறுவனத்தில் வேலை செய்பவர் போன்று உள்ளார் அமலா. அப்படி இருக்கும்போது அலுவலகத்தில் ஆடை இல்லாமல் இருக்கும் அளவுக்கு நடந்த சம்பவம் என்ன என்பதே அனைவரின் மனதில் எழுந்துள்ள கேள்வி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X