பாலிவுட் போகும் அமலா பால்: தனுஷ், த்ரிஷா மாதிரி ஆகிடாதே?
Recommended Video

சென்னை: நடிகை அமலா பாலுக்கு பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மலையாள திரையுலகில் உள்ள பல நடிகைகள் கோலிவுட் வரத் துடிக்கிறார்கள். கோலிவுட்டில் இருக்கும் பல நடிகைகளுக்கு பாலிவுட் பக்கம் சென்று ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. சிலரோ கோலிவுட்டே போதும் என்று இருக்கிறார்கள்.
இந்நிலையில் அமலா பால் பாலிவுட் செல்கிறார்.

அர்ஜுன் ராம்பல்
நரேஷ் மல்ஹோத்ரா அர்ஜுன் ராம்பலை வைத்து இயக்கும் இந்தி படத்தில் அமலா பால் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படம் மூலம் பாலிவுட் செல்லும் மகிழ்ச்சியில் உள்ளார் அமலா பால். நரேஷ் அமலாவின் படங்களை பார்த்துவிட்டு அவரை ஒப்பந்தம் செய்ததால் ஆடிஷன் நடத்தப்படவில்லையாம்.

பாலிவுட்
அமலா பால் பாலிவுட் செல்லும் ஆசையில் ஆடிஷன் செய்து வந்துள்ளார். பிகினியில் நடிக்க தயாரா என்று என்னிடம் சிலர் கேட்டனர். நானும் சரி என்றேன். ஆனால் என் கதாபாத்திரம் தான் எனக்கு முக்கியம். ஒரு முறை பஞ்சாபி பெண்ணாக நடிக்க கிட்டத்தட்ட தேர்வாகிவிட்டேன். ஆனால் பஞ்சாபி போன்று பேச முடியுமா என்ற சந்தேகம் இரு்நதததால் ஒத்துக் கொள்ளவில்லை என்கிறார் அமலா.

கதாபாத்திரம்
நான் ஆடிஷன் சென்று கொண்டிருந்தபோதிலும் எந்த கதாபாத்திரமும் எனக்கு பிடித்தது போன்று இல்லாததால் ஏற்காமல் இருந்தேன். இந்நிலையில் தான் நரேஷ் வந்து என்னிடம் கதை சொன்னார். அவர் நான் நடித்த தமிழ் படங்களை பார்த்துவிட்டு என்னை அணுகினார். அவர் கதை சொன்னதுமே பிடித்துவிட்டது என்று அமலா தெரிவித்தார்.

த்ரிஷா
தனுஷ் பாலிவுட் பக்கம் சென்றார். அவரின் முதல் படமான ராஞ்சனாவை விமர்சகர்கள் கொண்டாடியதை பார்த்து பாலிவுட்காரர்களுக்கு வயித்தெரிச்சலானது. நடிப்புக்கு பெயர் போன தனுஷால் பாடிபில்டர்களாக இருக்கும் பாலிவுட்டில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. த்ரிஷாவும் பாலிவுட் பக்கம் சென்று நோஸ்கட் வாங்கி வந்தார். இந்நிலையில் அமலா பால் பாலிவுட் செல்கிறார்.


Click it and Unblock the Notifications











