பீர் பாட்டிலும் கையுமா.. ஆண் நண்பர்களுடன் கும்மாளம் போடும் அமலா பால் !

கொச்சி : லாக்டவுனில் வீட்டில் இருக்கும் நேரத்தில் தனது நண்பர்களுடன் பீர் பாட்டில்களை கையில் வைத்துக் கொண்டு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அமலாபால் படு ஜாலியாக இருந்து வருகிறார்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளைத் தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் அமலாபால் தற்போது "லஸ்ட் ஸ்டோரீஸ்" தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார்.

எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் வாழ்க்கையை மிக சந்தோசமாக கழித்து வரும் அமலாபால் தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நண்பர்களுடன் மது பாட்டில்களை கையில் வைத்துக்கொண்டு ஜாலியாக இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஹரிஷ் கல்யாண்

ஹரிஷ் கல்யாண்

மலையாள திரைப்படங்களின் மூலம் அறிமுகமான அமலாபால் தமிழில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். தமிழில் இவர் நடித்த முதல் திரைப்படமே சர்ச்சைக்குரிய திரைப்படமாக அமைந்த நிலையில், இதில் நடிகர் ஹரிஷ் கல்யாண் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பல விருதுகளை வென்று

பல விருதுகளை வென்று

இருப்பினும் இயக்குனர் பிரபுசாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அமலாபால் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானார். மைனா திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நாயகி உள்ளிட்ட பல விருதுகளையும் வென்று பலரது கவனத்தையும் ஈர்த்தார். அமலாபாலின் திரை வாழ்க்கையில் மைனா திரைப்படம் பல விருதுகளை வென்று இன்று வரை ஒரு சிறந்த படமாகவே திகழ்ந்து வருகிறது.

இயல்பான நடிப்பின் மூலம்

இயல்பான நடிப்பின் மூலம்

தமிழில் நடித்த ஓரிரு படங்களிலேயே மிகச்சரியான கதை களங்களை தேர்ந்தெடுத்து தன்னை ஒரு சிறந்த நடிகையாக நிரூபித்த அமலா பால் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் பல வெற்றி படங்களை தனது இயல்பான நடிப்பின் மூலம் கொடுத்துக் கொண்டு வருகிறார்.

தெலுங்கு ரீமேக்கில்

தெலுங்கு ரீமேக்கில்

சில நாட்களுக்கு முன்பு அமலாபாலின் நடிப்பில் உருவாகிவரும் "அதோ அந்த பறவை போல" படத்தின் டிரைலர் காட்சிகள் வெளியாகி அனைவரையும் பிரம்மிக்க வைத்த நிலையில், தற்போது ஹிந்தியில் மனிஷா கொய்ராலா, ராதிகா, ஆப்தே உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான "லஸ்ட் ஸ்டோரீஸ்" என்ற அடல்ட் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துக்கொண்டு வருகிறார்.

நண்பர்களுடன் ஜாலியாக

நண்பர்களுடன் ஜாலியாக

ஒரு புறம் திரைப்படங்களில் பிஸியாவும், மற்றொருபுறம் சர்ச்சைகளிலும் சிக்கி வரும் அமலாபால் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் "என்னம்மா இப்படி பண்றிங்களேமா" என சொல்ல வைத்துள்ளார்.

ஆண் நண்பருடன் படுக்கையில்

ஆண் நண்பருடன் படுக்கையில்

லாக்டவுன் ஊரடங்கு காலத்தில் தனது நண்பர்களுடன் மிக மகிழ்ச்சியாக பொழுதை கழித்து வரும் அமலாபால், அவ்வாறு இருக்கும் மகிழ்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார், இந்நிலையில் தற்பொழுது நண்பர்களுடன் இணைந்து கையில் பீர் பாட்டில்களுடன் ஆடிப்பாடி கொண்டாட்டமாகவும், மற்றொருபுறம் போட் ஹவுஸில் தனது ஆண் நண்பருடன் படுக்கையில் படுத்தவாறு இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய நிலையில் தற்பொழுது இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X