அமலா பால் பர்த்டே பார்ட்டி.. கையில் ஒயின் கிளாஸ்.. கணவர் போட்ட போஸ்ட்.. குளியல் வீடியோ வேற!

சென்னை: நடிகை அமலா பால் இன்று தனது 33 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். லப்பர் பந்து படத்தின் மூலம் இந்த ஆண்டு ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஹரிஷ் கல்யாண் அறிமுகமான சிந்து சமவெளி படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானவர் தான் அமலா பால் .

முதல் படத்திலேயே சர்ச்சை கிளம்பிய நிலையில், அடுத்ததாக அவர் நடித்த மைனா திரைப்படம் அந்த சர்ச்சைகளை எல்லாம் அப்படியே காற்றில் பறக்கவிட்டு அமலா பாலை தமிழ் சினிமா கொண்டாட வைத்தது.

amala paul heroine

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் சீயான் விக்ரம் மற்றும் அனுஷ்கா நடித்த தெய்வத்திருமகள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அமலாபால் நடித்த நிலையில் இயக்குநருடன் காதல் ஏற்பட்டது. தொடர்ந்து விஜய் நடித்த தலைவா படத்திலும் ஹீரோயினாக அமலா பால் நடித்தார்.

அமலா பால் வயது: நடிகை அமலா பால் 1991ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி கேரளாவின் ஆலுவாவில் பிறந்தவர். இன்று தனது 33வது பிறந்தநாளை தனது 2வது கணவர் ஜெகத் தேசாய் உடன் பாலி தீவில் செம பார்ட்டி பண்ணி கொண்டாடி வருகிறார். தனது குழந்தையையும் நெஞ்சில் அணைத்தபடி அமலா பால் கணவர் மற்றும் புகைப்படக் கலைஞர் ஒருவருடன் பிறந்தநாளை வெளிநாட்டில் கொண்டாடி வருகிறார்.

அம்மாவுக்கான தோற்றம்: அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ள அமலா பால் குழந்தை பிறப்புக்குப் பிறகு கூடுதல் எடையுடன் அழகாக காட்சியளித்து வருகிறார். பாலி தீவில் பிகினி உடையில் அவர் போஸ் கொடுத்திருப்பதை பார்த்த ரசிகர்கள் ஆடிப் போயுள்ளனர். உடல் எடை அதிகரித்தாலும் இந்த அமலா பாலும் சூப்பர் தான் என கமெண்ட்டுகள் குவிகின்றன.

கையில் ஒயின் கிளாஸ்: அமலா பால் தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவர் கையில் ஒயின் கிளாஸ் மற்றும் டேபிளில் வித விதமான வெளிநாட்டு டிஷ்கள் உடன் கொடுத்த போஸ் புகைப்படத்தை வெளியிட்டு அவரது காதல் கணவர் ஜெகத் தேசாய் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், அமலா பால் மற்றும் ஜெகத் தேசாய் இருவரும் காதலிக்கத் தொடங்கியது, திருமணம் செய்துக் கொண்டது என அனைத்து நிகழ்வுகளின் தொகுப்பு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

குளியல் வீடியோ: உடல் எடை அதிகரித்த நிலையில், அமலா பால் இனிமேல் நடிக்க மாட்டார் என்கிற விமர்சனங்களும் குவிந்து வரும் நிலையில், அதெல்லாம் இல்லை பாஸ் என இந்த தோற்றத்திலும் மாடலாக பியர்ஸ் விளம்பரத்தில் நடித்துக் காட்டுகிறேன் என பியர்ஸ் போட்டு குளிக்கும் வீடியோவையும் வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு பர்த்டே ட்ரீட்டை வேறலெவலில் கொடுத்துள்ளார்.

ஏகப்பட்ட சர்ச்சைகள்: ஆடை படத்திற்கு பிறகு அமலா பால் சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தை அடைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு நடந்ததே வேறு. விவாகரத்து, நடிகருடன் தொடர்பு என கிளம்பிய கிசுகிசு, ஆண் நண்பர் ஒருவரை திருமணம் செய்துக் கொண்டதாக வெளியான புகைப்படங்கள், அதன் பின்னர் அவர் மீது அமலா பால் தொடர்ந்த வழக்கு என ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினாலும், அதையெல்லாம் போராடி வென்று தனது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொண்டு மனதுக்கு பிடித்தது போல் வாழ்ந்து வருகிறார். குழந்தையை கொஞ்சும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை நெகிழ வைத்தது குறிப்பிடத்தக்கது. ஹேப்பி பர்த்டே அமலா பால் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X