“கலைஞன் தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்”.. நிஜத்தில் செய்து காட்டிய அமலாபால்!

அமலாபால் கையில் கட்டுடன் கேரள மக்களுக்கு உதவி செய்யும் போட்டோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

By Jaya Chitra

Recommended Video

கை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்

திருவனந்தபுரம்: படப்பிடிப்பில் காயமடைந்த அமலாபால், கையில் கட்டுடன் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

சமீபகாலமாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க நடிகைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், 'அதோ அந்த பறவை போல' என்னும் நாயகியை மையப்படுத்திய படத்தில் அமலா பால் நடித்து வருகிறார்.

amala paul in kerala flood relief work


ஆக்சன் காட்சிகள் நிறைந்த இப்படத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சண்டைக் காட்சி ஒன்றில் நடித்த போது, வலது கையில் காயமடைந்தார் அமலாபால். தசை நார்களில் காயம் ஏற்பட்டதால் அவர் கொச்சியில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
amala paul in kerala flood relief work


இந்நிலையில், தனது வலியைப் பொருட்படுத்தாமல் கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை பொருள்களை கடைக்குச் சென்று வாங்கும் நிவாரணப் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

வெள்ளத்தில் தவிக்கும் கேரள மக்களுக்கு சினிமா பிரபலங்கள் பலர் நிதியுதவி செய்து வருகின்றனர். அந்தவகையில், தனக்கு உடல்நிலை சரியில்லாதபோதும் களத்தில் இறங்கி மக்களுக்குத் தேவையானவற்றை வழங்கி வருகிறார் அமலா பால் என அவரை சமூகவலைதளப் பக்கங்களில் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

amala paul in kerala flood relief work


சங்கமம் படப் பாடலில் ஒரு வரி வரும், 'கலைஞன் தன் கண்ணீரை மூடிக் கொண்டு மக்களுக்கு இன்பம் கொடுப்பான்’ என. நிஜத்தில் இந்த வரிகளை சத்தமில்லாமல் செய்து காட்டியுள்ளார் நடிகை அமலாபால்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X