அடி தூள்... பார்ட்டி மோடில் ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் அமலாபால் வெளியிட்ட புகைப்படங்கள்!
கொச்சி : நடிகை அமலாபால் நடித்துள்ள அதோ அந்த பறவை போல மற்றும் ஆடுஜீவிதம் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக தயாராக உள்ளது.
பிட்ட கதாலு என்ற ஆந்தாஜி திரைப்படத்தில் நடித்து பரபரப்பை கிளப்பிய அமலாபால் அதைத்தொடர்ந்து குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாஜி படத்திலும் நடித்து இருந்தார்.
சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் அமலாபால் இப்போது பார்ட்டி மோடில் ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் உள்ள புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டு வருகிறார்.

முன்னணி கதாநாயகியாக
மைனா படத்தின் மூலம் தன்னை மிகச் சிறந்த நடிகையாக நிலைநிறுத்திக் கொண்ட நடிகை அமலாபால் அடுத்தடுத்து நடித்த திரைப்படங்கள் அனைத்தும் மிகப் பெரிய வெற்றி பெற்றது. தமிழைத் தொடர்ந்து இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் பல படங்களில் நடித்து வந்தார். தமிழில் விஜய்யுடன் தலைவா திரைப்படத்தில் நடித்து முன்னணி கதாநாயகியாகவும் முன்னேறினார்.

படம் முழுவதும் ஆடையே இல்லாமல்
நயன்தாரா,கீர்த்திசுரேஷ், திரிஷா ஆகிய நடிகைகளின் வரிசையில் அமலாபாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் மேயாதமான் பட இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை திரைப்படம் முழுவதும் ஆடையே இல்லாமல் நடித்து அனைவரையும் வியப்படையச் செய்தார். ஆடை படத்தில் ஆடையில்லாமல் அமலாபால் நடித்தது ஒரு பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தாலும் இவரின் கதாபாத்திரம் மற்றும் நடிப்பு பாராட்டுகளை பெற்றதோடு இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடித்து
ஆடை படத்திற்குப் பிறகு அமலா பாலை சுற்றி சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கும் சூழலில் பிட்ட கதாலு என்ற திரைப்படத்தில் பல சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடித்து பரபரப்பை உண்டாக்கினார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்கள் ஒன்றாக இணைந்து குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கியிருந்தனர். அதில் கௌதம் மேனன் இயக்கத்தில் மென்மையான காதல் கதையில் நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.

பார்ட்டி மோடில் ட்ரான்ஸ்பரன்ட் சேலையில்
ஆடு ஜீவிதம் மற்றும் அதோ அந்த பறவை போல ஆகிய திரைப்படங்கள் அமலாபாலுக்கு நீண்ட காலமாக ரிலீசாகாமல் வெயிட்டிங்கில் உள்ளது. அதில் அதோ அந்த பறவை போல திரைப்படத்தில் அமலாபால் பல ஆக்ஷன் காட்சிகளில் பட்டையைக் கிளப்பியுள்ளார். சமீபத்தில் பிகினி புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களால் பங்கமாக வறுத்து எடுக்கப்பட்டட அமலாபால் இப்பொழுது பார்ட்டி மோடில் ட்ரான்ஸ்பரன்ட் சேலையில் உறவினரின் கல்யாணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











