எல்லாமே 2 நாளைக்கு தான்: அதிர வைக்கும் அமலா பால்
சென்னை: அமலா பால் பேசும் தத்துவத்தை பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது.
தமிழ், மலையாள படங்களில் கவனம் செலுத்தி வரும் அமலா பால் பாலிவுட் செல்கிறார். த்ரிஷா உள்ளிட்ட சில நடிகைகள் பாலிவுட் சென்ற வேகத்தில் திரும்பி வந்தது போன்று இல்லாமல் அங்கும் ஒரு ரவுண்டு வர ஆசைப்படுகிறார் அமலா.
படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் ஒரு பேக்கை தூக்கிக் கொண்டு எங்காவது சுற்றுலா சென்றுவிடுகிறார்.

காதல்
தனது காதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தாலும் காதல் மீது இன்னும் நம்பிக்கை வைத்திருக்கிறார் அமலா பால். விவாகரத்தான சோகத்தில் இருந்து முழுமையாக வெளியே வந்துவிட்டேன், அதனால் ஒரு பாதிப்பும் இல்லை என்று பொய் சொல்ல மாட்டேன் என்கிறார் அமலா. வாழ்க்கையில் பிரச்சனைகள் வந்தால் அதை பார்த்து நொடிந்துபோகக் கூடாது என்ற முடிவில் உள்ளார் அவர்.

2 நாட்கள்
கவலையே இல்லாமல் வாழ முடியும் என்று நான் கூற மாட்டேன். எந்த பிரச்சனை வந்தாலும் 2 நாள் சோகமாக இருந்துவிட்டு அதில் இருந்து விடுபட்டு அடுத்த வேலயையை பார்த்தால் தான் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று பெரிய மனுஷி மாதிரி தத்துவம் பேசுகிறார். இந்த சின்ன வயதில் அவருக்கு இத்தனை முதிர்ச்சியா என்று வியக்கத் தோன்றுகிறது.

சிறப்பு
அசைவ உணவு வகைகளை விரும்பி சாப்பிட்டு வந்த அமலா பால் தற்போது சுத்த சைவத்திற்கு மாறிவிட்டார். சைவமாக இருப்பதும் நன்றாக உள்ளது என்கிறார். ஜிம்மில் ஒர்க்அவுட், யோகா, தியானம் என்று உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறார் அமலா பால். வாழ்க்கை பலவற்றையும் கற்றுக் கொடுக்கும். அதில் நமக்கு தேவையானவற்றை நாம் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் அமலா.

வாழ்க்கை
2 நாட்கள் துக்கமாக இருந்துவிட்டு அதில் இருந்து வெளியேறிவிட வேண்டும் என்று அமலா கூறினாலும் விவாகரத்தானபோது அவர் அவ்வளவு எளிதில் அதில் இருந்து வெளியேறிவிடவில்லை. படங்களில் கவனம் செலுத்தி வரும் அமலா பாலிவுட்டில் நிலைத்து நிற்பது எப்படி என்று அனுபவசாலிகளிடம் அறிவுரை கேட்டு வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











