திடீரென திசை மாறும் அமலா பால்... சினிமாவில் இருந்து விலக முடிவா..? ரசிகர்கள் அதிர்ச்சி!
பாலி: மலையாள சினிமாவில் அறிமுகமான அமலா பால், தமிழில் முன்னணி நாயகியாக வலம் வந்தார்.
சிந்து சமவெளி படத்தின் சர்ச்சையான காட்சிகளால் லைம் லைட்டுக்கு வந்த அவருக்கு மைனா திரைப்படம் புதிய அடையாளத்தை கொடுத்தது.
இயக்குநர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால், சில வருடங்களிலேயே அவரை விவாகரத்து செய்துவிட்டார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கோயில்களுக்கு சென்று ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டி வரும் அமலா பால், சினிமாவில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மைனா அமலா பால்
மலையாளத்தில் 2009ம் ஆண்டு வெளியான நீலத்தாமரா திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அமலா பால். தமிழில் சிந்து சமவெளி படத்தில் நடித்து பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தார். பல சர்ச்சையான காட்சிகளுக்கு பெயர் பெற்ற இந்தப் படம் அமலா பாலுக்கு பெரிய அறிமுகம் கொடுத்தது. ஆனால், பிரபு சாலமன் இயக்கத்தில் விதார்த்துடன் நடித்த மைனா திரைப்படம் அமலா பாலுக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்தது. மேலும் சிறந்த நடிகை என்ற அங்கீகாரத்துக்கும் காரணம் ஆனது.

டாப் ஹீரோக்களின் ஜோடி
தெலுங்கு, மலையாளம் மொழி படங்களிலும் பிஸியான அமலா பால், தமிழில் விஜய்யுடன் தலைவா, விக்ரமுடன் தெய்வத் திருமகள், ஆர்யா ஜோடியாக வேட்டை, ஜெயம்ரவியுடன் நிமிர்ந்து நில், தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி, சூர்யாவுடன் பசங்க 2 படங்களில் நடித்து மாஸ் காட்டினர். அதேபோல், ஆடை படத்தில் நிர்வாணமாகவும் நடித்து கோலிவுட்டையே சூடாக்கினார். இதனிடையே இயக்குநர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டவர், ஒருகட்டத்தில் அவரை விவாகரத்தும் செய்தார்.

ஆன்மீக பயணத்தில் அமலா பால்
கடந்த சில வருடங்களாக அமலா பாலுக்கு சரியான மார்க்கெட் இல்லாததால் படங்களில் அதிகம் நடிக்கவில்லை. அதேநேரம் அவரே சொந்தமாக படம் தயாரித்து நடிக்கவும் செய்தார். இதனால், சமீபகாலமாக அவர் அடுத்தடுத்து பிரச்சினைகளை சந்தித்தார். ஏற்கனவே விஜய்யை விவாகரத்து செய்து பிரிந்தார், அடுத்ததாக பாடகர் பல் நிந்தர் சிங் தன்னிடம் மோசடி செய்துவிட்டதாக கூறி போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று வந்தார். இதனையடுத்து தற்போது அமலா பால் மனஅமைதி தேடி கோயில் கோயிலாக சென்று வருகிறார்.

சினிமாவில் இருந்து விலகலா?
சில தினங்களுக்கு முன்னர் பழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்த மறுநாளே சென்று வழிபாடு செய்தார். அதன்பின்னர் தற்போது இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள ஆசிரமத்துக்கு சென்று தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அமலா பால் ஆசிரமத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகின. சில நாட்கள் ஆசிரமத்தில் தங்கி தியானம், யோகா பயிற்சிகள் செய்துவிட்டு இந்தியா திரும்பியதும் மேலும் பல கோயில்களுக்கு ஆன்மிக பயணம் செல்லவிருக்கிறாராம்.

அமலா பால் ரசிகர்கள் அதிர்ச்சி
இதனால் அமலா பால் சினிமாவை விட்டு விலக முடிவு செய்து விட்டாரா? என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். கண்களை உருட்டி கிறங்க வைப்பதில் அமலா பால் எப்போதுமே ரசிகர்களின் கனவுக் கன்னியாக தான் வலம் வருகிறார். தற்போது மலையாளத்தில் பிருத்விராஜுடன் ஆடுஜீவிதம் படத்தில் நடித்துள்ள அமலா பால் விரைவில் இதுகுறித்து விளக்கம் கொடுப்பார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











