தண்ணீரில் மிதந்தபடி வானம் பார்க்கும் பிரபல ஹீரோயின்.. காதுகளில் அது காதல் மொழி பேசுச்சாமே!
சென்னை: பிரபல நடிகை ஆற்றுத் தண்ணீரில் மிதந்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை மாஸ்டர் ஹீரோயின் சிறப்பான போட்டோ என்று கூறியுள்ளார்.
தமிழில், மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி, திருட்டுப்பயலே 2 உட்பட பல படங்களில் நடித்திருப்பவர், அமலா பால்.
ஆடை படத்தில் ஆடையின்றி நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இப்போது, அதோ அந்த பறவை போல படத்தில் நடித்துள்ளார்.

திருமணம்
இதையடுத்து இப்போது மலையாளத்தில் ஆடுஜீவிதம் படத்தில் பிருத்வி ராஜுடன் நடித்து வருகிறார். தெலுங்கில் லஸ்ட் ஸ்டோரிஸ் வெப்சீரிஸின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்தி படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இவர் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து, கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

பாடகர் பவ்னிந்தர் சிங்
பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில், அமலா பால், தான் ஒருவரைக் காதலித்து வருவதாகக் கூறி இருந்தார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன், அவரும் மும்பையைச் சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங் என்பவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவின.

திருமண போட்டோ
அடுத்த சில நாட்களில், நடிகை அமலா பாலைத் திருமணம் செய்து கொண்டதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டார், பவ்னிந்தர் சிங். அதனுடன் 'வெட்டிங் த்ரோபேக்' என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவின. இந்நிலையில் அடுத்த சில மணி நேரங்களிலேயே புகைப்படங்களை நீக்கிவிட்டார்.

பொய்யான தகவல்
சில மாதங்களுக்கு முன்பே இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது. இது பொய்யான தகவல் என்று தெரிவித்திருந்தார் அமலா பால். லாக்டவுன் காரணமாக கேரளாவில் இருக்கும் நடிகை அமலா பால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருகிறார். இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தண்ணீரில் மிதந்தபடி இருக்கிறார்.

காதுகளில் கிசுகிசுத்தது
அதற்கு, 'இனிய காதல் மொழிகளை, தண்ணீர் என் காதுகளில் கிசுகிசுத்தது' என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன், இது அருமையான போட்டோ என்று கூறியுள்ளார். ஒரு ரசிகர், தண்ணிக்குள்ள முதலை வந்தா என்ன பண்ணுவீங்க? என்று கேட்டுள்ளார்.

சொல்லுங்களேன்
அதற்கு பதிலளித்துள்ள அமலா பால், சாப்பிடுவேன் என்று கூறியுள்ளார். இன்னொருவர், சூப்பர் கேப்ச்சர் சேச்சி, இது ஆலுவாவா, பெரியாறா? என்று கேட்டுள்ளார். ஒரு ரசிகை, தண்ணீர் பேசிய காதல் மொழிகளை சொல்லுங்களேன் என்று கேட்டிருக்கிறார். தண்ணிக்குள்ள ரொம்ப நேரம் இருந்தா ஜலதோஷம் பிடிக்கும், சீக்கிரம் கிளம்புங்க என்று ஒரு ரசிகர் கூறியுள்ளார்.

காத்திருக்கோம்
இன்ஸ்டாவில் லைவ் சாட்டுக்கு வர்ற ஐடியா இருக்கா? நாங்க காத்திருக்கோம் என்று ஒருவர் கேட்டுள்ளார். 'இந்த போட்டோவை டாப் ஆங்கிள்ல எடுத்திருந்தா நல்லா இருந்திருக்குமே? ஏன் அப்படி எடுக்கலை? என்று ஒரு நெட்டிசன் கூறியுள்ளார். இந்த போட்டோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











