twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'தலைவா' மட்டும் ஓடட்டும், அப்புறம் பாருங்க: சொடுக்கு போடும் அமலா பால்

    By Siva
    |

    சென்னை: தலைவா படத்தை அமலா பால் பெரிதும் எதிர்பார்க்கிறார்.

    மைனா படம் மூலம் நடிக்கத் தெரிந்த நடிகை என்று அமலா பால் பெயர் எடுத்தவர். அதையடுத்து அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படங்கள் என்றால் அது தெய்வத் திருமகள் மற்றும் வேட்டை ஆகும்.

    இந்நிலையில் அம்மணி எதிர்பார்த்தது போன்று அவருக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லை. இதனால் தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தத் துவங்கினார்.

    தெலுங்கில் ஓகே

    தெலுங்கில் ஓகே

    தெலுங்கு திரையுலகில் காஜல், சமந்தா உள்ளிட்டோரின் கை ஓங்கியிருப்பதால் அமலா பாலால் தான் நினைத்த இடத்தை அடைய முடியவில்லை. இந்நிலையில் அஞ்சலி வேறு தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்துவது அவருக்கு இடைஞ்சலாக உள்ளது என்று கூறப்படுகிறது.

    தலைவா

    தலைவா

    தமிழில் பெரிய இடத்தைப் பிடிக்கத் துடிக்கும் அமலாவுக்கு விஜய்யுடன் தலைவா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகிறது.

    பெரிய எதிர்பார்ப்பு

    பெரிய எதிர்பார்ப்பு

    தலைவா படம் தன்னை தமிழில் பெரிய இடத்திற்கு கொண்டு செல்லும் என்று அமலா பால் எதிர்பார்க்கிறார்.

    சமந்தா, யாமி கௌதம்

    சமந்தா, யாமி கௌதம்

    தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, யாமி கௌதம் ஆகியோரிடம் கேட்டுள்ளனர். அவர்கள் நடிக்க முடியாததால் தான் அந்த வாய்ப்பு அமலா பாலுக்கு சென்றுள்ளது.

    ஹன்சிகாவுக்கு நான் தான் போட்டி

    ஹன்சிகாவுக்கு நான் தான் போட்டி

    தலைவா படம் மட்டும் சூப்பர் ஹிட்டாகிவிட்டால் ஹன்சிகாவுக்கு போட்டி நான் தான் என்று அமலா பால் சொடுக்கு போடுகிறாராம்.

    English summary
    Amala Paul reportedly told that if Thalaivaa becomes hit, then she will give a tough competition to Hansika in Kollywood.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X