விட்டா ஆடை பட மோடுக்கே போயிடுவாங்க போல அமலா பால்.. சோபாவில் உட்கார்ந்திருக்க போஸை பாருங்க!
சென்னை: நடிகை அமலா பால் அரை டவுசருடன் கொடுத்துள்ள லேட்டஸ்ட் போஸை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். தமிழ் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கும் போதே சிந்து சமவெளி படத்தை தேர்வு செய்து நடித்து அதிர வைத்த அமலா பால், ரத்தினகுமார் இயக்கத்தில் ஆடை படத்தில் ஹாலிவுட் லெவலுக்கு சென்று நடித்து பரபரப்பை பற்ற வைத்தார்.
முதல் திருமணம் சரியாக செட்டாகாத நிலையில், 2வது திருமணத்தை செய்துக் கொண்டு அழகான ஒரு ஆண் குழந்தையையும் பெற்றெடுத்த அமலா பால் தனது பருமனான உடலை தொடர்ந்து உடற்பயிற்சி செய்து பழையபடிக்கு கொண்டு வந்து விட்டார்.

இந்நிலையில், லேட்டஸ்ட்டாக அவர் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார்.
போல்டின் உச்சம்: தமிழ் சினிமாவில் நயன்தாரா பில்லா படத்தில் பிகினி உடையை அணிந்துக் கொண்டு நடந்து வந்ததை பார்த்து ரசிகர்கள் அப்படியே ஷாக் ஆனார்கள். அதைவிட ஒரு படி மேலே சென்று ஆடை படத்தில் ஆடையே அணியாமல் பல காட்சிகள் நடித்து கடைசி வரை ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்தவர் தான் நடிகை அமலா பால். ஆனால், அந்த படத்துக்குப் பிறகு அவர் எதிர்பார்த்ததை போல தமிழ் சினிமாவில் பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. மேலும், முதல் திருமணம் விவாகரத்தில் முடிய 2வதாக ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
அரை டவுசருடன் அமலா பால்: 2வது திருமணத்துக்குப் பிறகு செம ஹேப்பியாக இருக்கும் பிரபலங்கள் பட்டியலில் அமலா பாலுக்கும் முக்கிய இடம் உள்ளது. செளந்தர்யா ரஜினிகாந்த், சமந்தா, சம்யுக்தா மேனன் வரிசையில் அமலா பாலும் செம ஹேப்பியாக உள்ளார். பிரக்னன்ஸி காரணமாக அதிகரித்த உடல் பருமனை எல்லாம் முற்றிலுமாக குறைத்து விட்டு அரை டவுசருடன் போஸ் கொடுத்து அசத்தி உள்ளார்.
வெறும் சட்டை மட்டும் இல்லை: ஆனால், நடிகை அமலா பால் சோபாவில் அமர்ந்துக் கொண்டு கொடுத்துள்ள போஸை பார்த்த ரசிகர்கள் வெறும் சட்டையுடன் போஸ் கொடுத்துள்ளாரா? என பதறிவிட்டனர். நல்ல வேளையாக அரை டவுசருடன் இருக்கும் இன்னொரு போட்டோவையும் அமலா பால் வெளியிட்ட நிலையில், அந்த டவுட் மறைந்து விட்டது. கடைசியாக பிருத்விராஜ் ஜோடியாக ஆடு ஜீவிதம் படத்தில் அமலா பால் சிறப்பாக நடித்திருந்தார். மீண்டும் அவர் பழையபடி படங்களில் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.


Click it and Unblock the Notifications











