‘ஆடை’யில்லாமல் நடித்தது ஒரு குத்தமா.. அடுத்தடுத்து பட வாய்ப்புகளை இழக்கும் அமலாபால்!

ஆடை படத்தில் நடித்ததால், நடிகை அமலாபால் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை இழந்து வருகிறார்.

Recommended Video

Aadai Public review | Aadai Review

சென்னை: ஆடை படத்தால் போல்டான நடிகை என்ற பேர் கிடைத்துள்ள போதும், அடுத்தடுத்து பட வாய்ப்புகளை இழந்து வருகிறார் அமலாபால்.

'மேயாதமான்' ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நாயகியாக நடித்துள்ள படம் ஆடை. இப்படத்தில் அவர் நிர்வாணமாக நடித்துள்ளது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. ஆனால், படத்தைப் பார்த்தவர்கள் அதில் விரசமில்லை, மிகவும் போல்டாக அமலாபால் நடித்துள்ளார் எனப் பாராட்டி வருகின்றனர்.

திரைப் பிரபலங்களிடமும், ரசிகர்களிடம் நல்ல விதமான விமர்சனங்கள் கிடைத்து வருவதால் அமலாபாலும், ஆடை படக்குழுவினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

விஜய்சேதுபதி படம்:

விஜய்சேதுபதி படம்:

ஆனால், ஆடை படத்தால் அமலாபால் தொடர்ந்து படவாய்ப்புகளையும் இழந்து வருகிறார். இது அவரது ரசிகர்களை வேதனையடைய வைத்துள்ளது. முதலில் விஜய் சேதுபதி பட வாய்ப்பை அவர் இழந்தார். இது தொடர்பாக அவர் உணர்ச்சிகரமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

அமலாபால் அறிக்கை:

அமலாபால் அறிக்கை:

அதில், ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்ததாலேயே விஜய் சேதுபதி படத்தில் இருந்து தன்னை தூக்கி விட்டதாக அவர் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தமிழ்த் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு நடிகையாக படத்தில் அவர் நடித்த விதத்திற்காக அவரை புதிய படத்தில் இருந்து தூக்குவது சரியல்ல என அமலாபாலுக்கு ஆதரவாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

நல்ல விமர்சனம்:

நல்ல விமர்சனம்:

இந்நிலையில் ஆடை படம் ரிலீசாகி நல்ல விதமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதன் மூலம் நடிப்பதற்கு வாய்ப்புள்ள, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் அமலாபாலுக்கு கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், திரும்பவும் ஒரு நல்ல படம் அவரது கைநழுவிப் போய் இருக்கிறது.

சசி கேரக்டர்:

சசி கேரக்டர்:

தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தியின் தலைவர் ஜெகதீஸ்வர ரெட்டி, சசிலலிதா எனும் பெயரில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் முன்னதாக சசி கதாபாத்திரத்தில் அமலாபாலை தான் நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்திருந்ததாம். ஆனால், ஆடை படத்தில் நடித்ததால் தற்போது அந்த முடிவை ஜெகதீஸ்வர ரெட்டி மாற்றிக் கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X