உங்களை ரொம்ப மிஸ் பண்றேன் பாட்டிமா... வருத்தத்தோடு ஈஸ்டர் கொண்டாடிய அமலாபால்

திருவனந்தபுரம்: விரைவில் இயக்குநர் விஜயை கரம் பிடிக்க இருக்கிறார் நடிகை அமலாபால். கல்யாணக் கனவுகளில் அவர் மகிழ்ச்சியாக இருப்பார் என எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்க, பாவம் அவரோ தனது பாட்டியை நினைத்தபடி சோகமாக ஈஸ்டர் கொண்டாடினாராம்.

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர் நடிகை அமலாபால். சிந்து சமவெளி படம் எதிர்மறையான ஓப்பனிங்கைக் கொடுக்க மைனா படத்தால் முன்னணி நடிகைகளில் ஒருவரானார்.

அதனைத் தொடர்ந்து விக்ரம், விஜய், தனுஷ், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சமீபத்தில் ஜெயம் ரவியுடன் நடித்த 'நிமிர்ந்து நில்' படம் வெளியானது. விரைவில் தனுஷுடன் நடித்த வேலையில்லாத பட்டதாரி ரிலீசாகவுள்ளது.

இதற்கிடையே தெய்வத் திருமகள் பட வாய்ப்பு மூலம் அறிமுகமான இயக்குநர் விஜயை வரும் ஜூன் மாதம் திருமணம் செய்ய இருக்கிறார் அமலாபால்.

ஈஸ்டர் கொண்டாட்டம்...

ஈஸ்டர் கொண்டாட்டம்...

இந்நிலையில் கடந்த ஞாயிறன்று கொண்டாடப்பட்ட ஈஸ்டர் பண்டிகைக்காக தனது சொந்த ஊருக்கு சென்றிருந்தார். அங்கே தனது குடும்பத்தாருடன் ஈஸ்டர் கொண்டாடினார்.

என் பாசத்திற்குரிய பாட்டி...

என் பாசத்திற்குரிய பாட்டி...

தனது ஈஸ்டர் கொண்டாட்டங்கள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் விவரித்துள்ளார் அமலாபால். அதில் தனது பாட்டியை குறித்த தனது நினைவுகளை அவர் பகிர்ந்துள்ளார்.

மலரும் நினைவுகள்...

மலரும் நினைவுகள்...

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, ‘பழைய ஈஸ்டர் கொண்டாட்டங்களை நினைத்துப் பார்க்கிறேன். எவ்வளவு மகிழ்ச்சியான நாட்கள் அவை.

எதுவுமே ஈடில்லை...

எதுவுமே ஈடில்லை...

எதுவுமே உங்கள் இடத்தை இப்போது நிரப்பவில்லை பாட்டிமா. நீங்கள் என் மீது செலுத்திய அந்த அபரிமிதமான அன்பிற்கு எதுவுமே ஈடாகாது' எனத் தெரிவித்துள்ளார் அமலாபால்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X