என்னை உற்சாகப்படுத்துவது அது ரெண்டும் தான்.. நடிகை அமலா பால் ஷேர் பண்ண சூப்பர் சீக்ரெட்!

சென்னை: நடிகை அமலா பாலை தினமும் உற்சாகப்படுத்துவது இரண்டு விஷயங்கள் தான் என ஆரோக்கிய பானம் ஒன்றை விளம்பரப்படுத்தியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

சினிமாவை விட சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் நடிகை அமலா பால்.

4 மில்லியன் ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்ந்து வருகின்றனர்.

வெப்சீரிஸில் ஆர்வம்

வெப்சீரிஸில் ஆர்வம்

தமிழ் சினிமாவில் மறைமுகமாக நடிகை அமலா பாலுக்கு பட வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையில், தெலுங்கு மற்றும் இந்தியில் வெப் தொடர்களில் நடிக்க அதிகளவில் ஆர்வம் செலுத்தி வருகிறார் நடிகை அமலா பால். கடைசியாக தமிழில் அவர் நடித்த குட்டி ஸ்டோரி திரைப்படமும் பெரிதாக கைகொடுக்கவில்லை.

அந்த படம் என்னாச்சு

அந்த படம் என்னாச்சு

ஆடை படத்திற்கு பிறகு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகை அமலா பாலுக்கு அதுவரை வந்து கொண்டிருந்த ஓரிரு வாய்ப்புகளும் முற்றிலும் வராமல் நின்று போனது. கடைசியாக அவர் நடிப்பில் உருவான அதோ அந்த பறவை போல திரைப்படம் இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை. எப்போது வரும் என்றே தெரியவில்லை.

இன்ஸ்டாவில் கவர்ச்சி

இன்ஸ்டாவில் கவர்ச்சி

4 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கொண்டுள்ள நடிகை அமலா பால் தொடர்ந்து ரசிகர்களுக்காக கவர்ச்சிகரமான புகைப்படங்களையும் பிகினி புகைப்படங்களையும் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். சமீபத்தில் அவர் எடுத்துக் கொண்ட வெட்டிங் தீம் போட்டோஷூட்களும் வைரலாகின.

விளம்பர படங்களில்

விளம்பர படங்களில்

சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் வராத நிலையில், விளம்பர படங்களில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார் நடிகை அமலா பால். வாட்ச் விளம்பரம் உள்ளிட்ட சில விளம்பரங்களுக்காக ஏற்கனவே போட்டோஷூட் நடத்திய அமலா பால் தற்போது விளம்பர வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

அந்த இரண்டு விஷயங்கள்

அந்த இரண்டு விஷயங்கள்

தினமும் காலை எழுந்ததும் யோகா மற்றும் மான்ஸ்டர் ஆரோக்கிய பானம் குடிக்காமல் எனது காலை பொழுது தொடங்காது என மான்ஸ்டர் குளிர் பானத்துக்கு கவர்ச்சி பொங்க ஜிம் டிரெஸ்சில் நடித்துக் கொடுத்துள்ளார் நடிகை அமலா பால். தினமும் ஒரு யோகா வீடியோ போடுங்க நாங்களும் யோகாவை ஃபாலோ செய்கிறோம் என அமலா பாலின் ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X