கொஞ்சம் மிஸ் ஆகிருந்தா அமலா பாலுக்கு அன்னைக்கே பால் ஊத்திருப்பாங்க.. தம்பி ராமையா ஓபன் டாக்

சென்னை: நடிகை அமலா பால் திருமணமாகி ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகியிருக்கிறார். இப்போது படங்களில் நடிப்பதை நிறுத்தியிருக்கிறார். சூழல் இப்படி இருக்க மைனா திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் நிறைவானதையடுத்து படக்குழுவினர் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தார்கள். அப்போது சீன் ஒன்று எடுக்கும்போது நடந்த விஷயத்தை தம்பி ராமையா பகிர்ந்துகொண்டது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியிருக்கிறது.

சிந்து சமவெளி படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமான அமலா பால் அந்தப் படத்தில் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்தார். முதல் படத்திலேயே இப்படி ஒரு விவகாரமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாரே என்று பலரும் பேசினார்கள். அதற்கு பிறகு பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்த மைனா திரைப்படம் ஒட்டுமொத்தமாக அந்தப் பேச்சையெல்லாம் மறக்கடித்தது. அமலாவுக்குள் இப்படி ஒரு நடிப்பா என விமர்சித்தவர்கள் எல்லாம் வியந்தார்கள்.

முன்னணி நடிகை: மைனா படத்தின் வெற்றி அவர் மீது இருந்த இமேஜை மாற்றியதோடு மட்டுமின்றி ஏகப்பட்ட வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தது. அதன் காரணமாக கோலிவுட்டில் டாப் நடிகைகளில் ஒருவராக வளர ஆரம்பித்தார். அதுமட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் தடம் பதித்து அங்கும் பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார். அந்த சமயத்தில்தான் தமிழில் விஜய்க்கு ஜோடியாக தலைவா படத்தில் நடித்தார்.

Amala Paul Narrow Escape on Mynaa Set Thambi Ramaiah s Viral Revelation
Photo Credit:

திருமணம் டூ விவாகரத்து: தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தபோது அதன் இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து அவருக்கு ரியல் வாழ்க்கையில் ஜோடியாக மாறினார். இரண்டு பேரின் திருமணத்துக்கு முதலில் விஜய்யின் வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை. ஆனால் விடாப்பிடியாக இருந்து சம்மதம் வாங்கினார் விஜய். திருமணத்துக்கு பிறகு சில வருடங்களே சேர்ந்து வாழ்ந்த அவர்கள் சில காரணங்களால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்கள்.

இரண்டாவது திருமணம்: முதல் திருமண விவாகரத்துக்கு பிறகு சில வருடங்கள் சிங்கிளாக இருந்த அமலா; ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இலை என்ற மகனும் இருக்கிறார். இப்போது சினிமாவில் நடிப்பதை நிறுத்தியிருக்கும் அவர் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கிறார். இந்நிலையில் மைனா திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் நிறைவு செய்ததையொட்டி அமலா பால், விதார்த், பிரபு சாலமன், தம்பி ராமையா, டி.இமான் ஆகியோர் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்கள்.

தம்பி ராமையா சொன்னது: அந்தப் பேட்டியில் பேசிய இயக்குநர் பிரபு சாலமன், "மைனா படத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழும் சீன் இருக்கும். அந்த சீனை க்ரீன் மேட்டில் எல்லாம் எடுக்கவில்லை. மூணாறில் ஒரு பள்ளத்தாக்கில் அந்தப் பேருந்தின் பாதியை செட் போட்டோம். இரண்டு கிரேன்களை வைத்து அதை அப்படியே தூக்கினோம். ரியலாகவே அதை எடுத்தோம்' என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய தம்பி ராமையா, "அமலா பால், விதார்த்துக்காவது பிடித்துக்கொள்ள எதாவது இருந்தது. ஆனால் எனக்கு எதுவுமே இல்லை.

அதில் நடித்த ஃபைட்டர்ஸ்கூட என்னிடம், சார் நாங்களே இதற்கு ஒத்துக்கொள்ளமாட்டோம். நீங்கள் இயக்குநரிடம் சொல்லுங்கள் என சொன்னார்கள். அந்த சீனை எடுத்து இறங்கிய ஐந்தாவது நிமிடத்தில் அந்தப் பேருந்து பள்ளத்தில் விழுந்துவிட்டது. ஐந்து நிமிடம் முன்னாடி விழுந்திருந்தால் அமலாவுக்கு அன்னைக்கே பால்தான் என சொல்ல; அருகில் இருந்தவர்கள் பலமாக சிரித்துவிட்டார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X