திருமணத்திற்குப் பின் மீண்டும் 'ஸ்கூல் யூனிபார்மை' கையில் எடுத்த அமலா பால்!
திருமணம் ஆன அமலா பால் பள்ளி மாணவியாக நடிக்கிறார். தமிழில் அல்ல மலையாளப் படத்தில் நடிக்கிறார்.
இயக்குனர் விஜய்யை காதல் திருமணம் செய்துகொண்ட அமலா பால். நடிப்பிற்கு கொஞ்சம் பிரேக் விட்டிருந்தார். இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். இம்முறை மீண்டும் தாய் மொழியிலேயே தொடங்கியுள்ளார் அமலாபால்.
திருமணம் ஆனபிறகு நடிகைகளுக்கு அம்மா அல்லது அண்ணி வேடம்தான் தருவது வழக்கம். அதிலிருந்து வித்தியாசப்பட்டிருக்கிறார் அமலா பால்.

மைனா நாயகி
2009ல் மலையாளத்தில் வெளியான 'நீலத்தாமரா' படம் மூலம் அறிமுகமானவர் அமலாபால். தமிழில் 'வீரசேகரன்', 'சிந்துசமவெளி' படங்களில் நடித்திருந்தாலும், பிரபுசாலமன் இயக்கத்தில் நடித்த 'மைனா' படம்தான் அவரை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது.
தமிழில் முன்னணி நடிகை
அதன் பின்பு 'தெய்வத்திருமகள்', 'காதலில் சொதப்புவது எப்படி', 'வேட்டை', 'தலைவா', 'நிமிர்ந்து நில்' ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.
வேலையில்லா பட்டதாரி
தனுஷுக்கு ஜோடியாக 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் நடித்த அவர், இயக்குநர் விஜய்யை கடந்த ஜூன் 12ல்திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் வெளியான வேலையில்லா பட்டதாரி சூப்பர் ஹிட் படமானது.
நடிப்பிற்கு முழுக்கு இல்லை
திருமணத்திற்குப் பிறகு பிரமாதமான கதைகள் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன் என்று சொல்லியிருந்தார் அமலாபால். ஆனால், கண்டிப்பாக நடிப்பேன் என்று உறுதியாக சொல்லவில்லை. ஆனால் மிலி என்ற படத்தில் நடிக்க அவர் திருமணத்திற்கு முன்பே ஒப்புக் கொண்டிருந்தார். அந்தப் படம் தற்போதுதான் தொடங்கியுள்ளது.
பள்ளி மாணவியாக
இந்தப் படத்தில் பள்ளி மாணவியாக நடிக்கிறார் அமலா பால். இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து கூறியுள்ள அமலாபால், சினிமாவில் எனது பயணம் அமைதியாக தொடங்கியது. மைனா படம் என் மனதுக்கு நெருக்கமானது. அதில் பள்ளி மாணவியாக நடித்தேன். கடவுள் அருளால் மீண்டும் பள்ளி மாணவியாக மிலி படத்தில் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
என் கனவுப் படம்
மலையாளத்தில் இப்படம் உருவாகிறது. மறுபடியும் இதுவொரு நல்ல அனுபவமாக அமைந்தது. உணர்வுகளின் வெளிப்பாடாக இந்த கதாபாத்திரம் அமைந்திருந்தது. இதை திரும்பிபார்க்கும்போது முதல் நாள் படப்பிடிப்பிலிருந்து நான் எனது பயணத்தை தொடங்குவதுபோல் இருக்கிறது. இது எனது கனவு படம் என்று அமலா பால் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











