இந்திப் பட வாய்ப்பை மறுத்த அமலா பால்... அவ்ளோ பிஸி!!

By Shankar

இந்தியில் அக்ஷய் குமாருடன் நடிக்க வந்த வாய்ப்பை வேண்டாம் என மறுத்துவிட்டார் அமலா பால்.

காரணம், தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் கைவசம் ஏராளமான படங்கள் உள்ளதால், இந்திக்கு கால்ஷீட் ஒதுக்க முடியவில்லையாம்.

ரமணா ரீமேக்

ரமணா ரீமேக்

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற படம் ரமணா. இந்தப் படம் இந்தியில் கப்பார் என்ற பெயரில் வெளியாகிறது. அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்தார்.

ஆரம்பத்தில் ஆர்வம்

ஆரம்பத்தில் ஆர்வம்

இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு அமலாவுக்கு கிடைத்தது. ஆரம்பத்தில் இந்தப் படத்தில் நடிக்க மிகுந்த ஆர்வம் காட்டினார் அமலா பால். மும்பைக்கு சில முறை பறந்து போய் ஸ்க்ரிப்டையும் கேட்டார். இந்தியில் தனது முதல் படம் கப்பார் ஆக இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறிவந்தார்.

தேதி இல்லையே

தேதி இல்லையே

ஆனால் இப்போது படத்தில் நடிக்க கால்ஷீட் இல்லை என்று கைவிரித்துவிட்டாராம் அமலா. தமிழில் மட்டுமே ஆறு படங்களும், மலையாளம், தெலுங்கில் தலா மூன்று படங்களும் கையில் உள்ளதால் கால்ஷீட் தர முடியவில்லை என்று அமலா பால் கூறியுள்ளார்.

மேலும் ஒரு மலையாளப் படம்?

மேலும் ஒரு மலையாளப் படம்?

இதற்கிடையில் மேலும் ஒரு மலையாளப் படத்தில் அமலா ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து அமலா கூறுகையில், 'நான் புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருப்பதாக வெளியான செய்தி, ஜிம்பாப்வே உலகக் கோப்பையை வென்றது என்பதைப் போல அபத்தமானது," என்று குறிபப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X