எனக்கு மட்டும் ஏன் இப்படி பாய் ஃப்ரெண்ட்ஸ்.. புகார் கொடுத்த பின்தான் அவர் வந்தார்.. அமலா பால் ஓபன்

சென்னை: சிந்து சமவெளி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அமலா பால்; தலைவா படத்தில் நடித்தபோது அந்தப் படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்தார். அவர்களுக்கு நடந்த திருமணம் சில காலத்திலேயே பிரிவில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்ட அமலாவுக்கு இலை என்கிற மகன் இருக்கிறான். தற்போது தனது திருமண வாழ்க்கையை சுமூகமாக நகர்த்திக்கொண்டிருக்கிறார்.

கேரளாவை சேர்ந்த அமலா பால் சிந்து சமவெளி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். பொதுவாக ஒரு நடிகை தான் அறிமுகமாகும் முதல் படம் எந்தவித சர்ச்சையையும், விமர்சனத்தையும் சந்திக்கக்கூடாது என்றுதான் நினைப்பார். ஆனால் அமலா பால் விஷயத்தில் மாற்றாக நடந்தது. அவர் அறிமுகமான முதல் படமே பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பிறகு அவர் நடித்த மைனா திரைப்படம் அமலா பாலுக்கு பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது.

அமலா பாலின் வளர்ச்சி: மைனா படத்துக்கு பிறகு அமலா பாலின் பெயர் கோலிவுட்டில் பெரிதாகவே ஒலிக்க தொடங்கியது. பலரும் அவரை தங்கள் படத்துக்கு ஹீரோயினாக புக் செய்தார்கள். அப்படி அவர் விஜய், ஆர்யா என முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். அந்தப் படங்களும் அவருக்கு ஹிட்டாகவே அமைந்தன. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் சில படங்களில் நடித்த அவர்; அங்கும் தனது மார்க்கெட்டை சொல்லிக்கொள்ளும்படிதான் வைத்திருந்தார்.

Amala Paul reveals how husband Jagat Desai came into her life
Photo Credit:

விஜய்யுடன் திருமணம்: சூழல் இப்படி இருக்க தலைவா படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் ஏ.எல்.விஜய்யுடன் காதலில் விழுந்தார் அமலா. முதலில் இவர்களது காதலுக்கு விஜய்யின் வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. பிறகு ஒருவழியாக வீட்டு சம்மதத்தை வாங்கிய இரண்டு பேரும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இரண்டு பேரும் திருமண வாழ்க்கையை சுமூகமாகவே ஓட்டிக்கொண்டிருந்தார்கள். அமலாவும் திருமணத்துக்கு பிறகு சில படங்களில் நடித்துவந்தார்.

விவாகரத்து: ஆனால் கடந்த 2017ஆம் ஆண்டு விஜய்யை விவாகரத்து செய்தார். அதற்கு காரணம் அவர் திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்ததுதான் என்று சொல்லப்பட்டது. விவாகரத்துக்கு பிறகு கலங்காத அவர் தொடர்ந்து தனது கரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதேசமயம் யாரையும் காதலிக்காமல் சிங்கிளாகவே இருந்தார். இந்நிலையில் அவர் ஜகத் தேசாய் என்பவரை காதலிப்பதாக பேச்சுக்கள் எழுந்துகொண்டே இருந்தன.

திருமணம் செய்துகொண்ட அமலா பால்: நிலவரம் இவ்வாறு இருக்க கடந்த 2023ஆம் ஆண்டு ஜகத் தேசாயை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இலை என்ற மகன் பிறந்தார். திருமணத்துக்கு முன்பே தான் கர்ப்பமாக இருந்தேன் என்று அமலா பால் ஒரு பேட்டியில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அமலா பால் தனது திருமண வாழ்க்கையை சுமூகமாகவும், நிம்மதியாகவும் நகர்த்திக்கொண்டிருக்கிறார்.

புகார் கொடுத்தேன்: இந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், "நான் கடவுளிடம், 'கடவுளே ஏன் எனக்கு மட்டும் இப்படி பாய் ஃப்ரெண்ட்ஸ அனுப்புற. நான் எவ்வளவு ஸ்வீட்டான பெண். நான் எல்லோரையும் சர்ப்ரைஸ் செய்கிறேன். இவ்வளவு லவ் பண்றேன். எனக்கு மட்டும் ஏன் இவங்கள் அனுப்புற' என புகார் செய்தேன்.என்னை சர்ப்ரைஸ் செய்யும், என்னை டேட்டுக்கு அழைத்து செல்லும் பாய் ஃப்ரெண்ட் வேண்டுமென்று நான் கடவுளிடம் கேட்பேன். அதற்கு பிறகுதான் ஜகத் தேசாயை கடவுள் அனுப்பினார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X