அவரை பார்த்ததும் கர்ப்பம்.. வேறு வழியில்லாமல் கல்யாணம் செஞ்சோம்.. அமலா பால் ஓபன் டாக்

சென்னை: இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால் அவரை விவாகரத்து செய்துவிட்டு ஜகத் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இலை என்ற ஒரு மகன் இருக்கிறார். உச்சபட்ச காதலோடு அவர்கள் தங்கள் வாழ்க்கையை சுமூகமாக வாழ்ந்துவருகிறார்கள். இந்நிலையில் அமலா சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

சிந்து சமவெளி படத்தில் அறிமுகமாகி மைனா என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்தார் அமலா பால். அப்படத்துக்கு பிறகு தலைவா, தெய்வ திருமகள் ஆகிய படங்களில் நடித்தபோது அதன் இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்தார். இரண்டு பேரின் வீட்டு சம்மதத்துடனேயே திருமணம் நடந்தது. நிச்சயம் பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து சிறந்த ஜோடிக்கு உதாரணமாக மாறுவார்கள் என்றுதான் அவரது ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருமே கணித்திருந்தார்கள்.

Amala Paul Reveals Reason Behind Second Marriage Actress Opens Up About Pregnancy Before Wedding
Photo Credit:

விவாகரத்து செய்துகொண்ட ஜோடி: ஆனால் இரண்டு பேருக்கும் ஏதோ சில காரணங்களால் விரிசல் வந்தது. சின்ன விரிசல்தான் போகப்போக சரியாகிவிடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நாளடைவில் மிகப்பெரிய விரிசலாகி இனிமேல் சேரவே முடியாத நிலைமைக்கு சென்றுவிட்டது. எனவே இனிமேலும் சேர்ந்து வாழ்வது இயலாத விஷயங்களில் ஒன்று என முடிவு செய்து கண்ணியமாக பிரிந்துவிட்டார்கள். அந்தப் பிரிவுக்கு வழக்கம்போல் ஏகப்பட்ட பேர் கதைகளை கட்ட தொடங்கினார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட இரண்டு பேரும் அமைதியாக கடந்துவிட்டார்கள்.

ஜகத் தேசாய்: விஜய்யுடனான பிரிவுக்கு பிறகு சில காலம் சிங்கிளாக இருந்தார் அமலா பால். அந்த சமயத்தில் கோவாவில் வைத்து ஜகத் தேசாய் என்பவரை சந்தித்தார். அந்த சந்திப்பு நிகழ்ந்தவுடனேயே இரண்டு பேருக்கும் காதலும் மலர்ந்தது. அதனையடுத்து திருமணமும் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு இலை என்ற மகனும் இருக்கிறது. இப்போது கணவன், மகன் என குடும்பம் சகிதமாக நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்.

சினிமாவிலிருந்து ஒதுங்கிய அமலா: திருமணத்துக்கு பிறகு ஆடுஜீவிதம் படத்தில் நடித்திருந்தார். அதில் அவருக்கு முக்கியத்துவம் குறைவான அளவிலேயே ரோல் கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு மகன் பிறந்தார். எனவே மகனை வளர்க்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டதால் சினிமாவிலிருந்து முழுக்க தற்போதைக்கு ஒதுங்கியிருக்கிறார். மீண்டும் அவர் நடிப்பாரா என்பது தெரியவில்லை. இந்நிலையில் அவர் சமீபத்தில் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று ரசிகர்களிடம் பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறது.

அமலா பால் பேட்டி: அவர் கொடுத்த பேட்டியில், "வாழ்க்கை ஒரு மாதிரி போய்க்கொண்டிருந்தபோது ஜோசியர் ஒருவரை பார்த்தேன். அப்போது அவர் என்னிடம் உங்களுக்கு 32 வயதில் திருமணம் நடக்கும் என்று சொன்னார். நானோ எனக்கு பாய் ஃப்ரெண்டே இல்லை இதெல்லாம் எப்படி சாத்தியம் என நினைத்துக்கொண்டேன். அவர் சொன்ன கொஞ்ச நாட்களிலேயே ஜகத்தை நான் கோவாவில் வைத்து சந்தித்தேன். டேட் செய்ய ஆரம்பித்தோம். அப்போது நான் கர்ப்பமும் ஆகிவிட்டேன்.முதலில் நான் திருமணம் செய்யும் பிளானிலேயே இல்லை. ஆனால் கர்ப்பமாகிவிட்டேன். திருமணம் செய்துதானே ஆக வேண்டும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X